தியேட்டர் பிரின்ட் வச்சே த்ரிஷாவுக்கு லிப் லாக் அடிச்சானுங்க.. இப்ப மட்ட வீடியோவே ரிலீஸ் ஆகிடுச்சே!
சென்னை: தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி 18 நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை பாக்ஸ் ஆபிஸில் நிகழ்த்தியுள்ளது. யுவன் சங்கர் ராஜா புதிய கீதை படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
படத்தின் லிரிக் வீடியோக்கள் வெளியான போது தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா பாடல்கள் மீது கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், படத்தில் வீடியோவாக பாடல்களை பார்க்கும் போது தளபதி ரசிகர்கள் நல்லாவே பாடல்களுக்கு வைப்புடன் நடனமாடினர்.

அதிலும், குறிப்பாக விஜய்யுடன் த்ரிஷா இணைந்து "அப்படிப்போடு" பாடலுக்கு இணையாக ஒரு ஆட்டத்தை இந்த "மட்ட" பாடலில் போட்டிருந்த நிலையில், ஏகப்பட்ட ரீல்ஸ் உலகம் முழுவதும் டிரெண்டானது. அதில், சிலர் எல்லை மீறிய எடிட்டிங்கையும் பண்ணி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
த்ரிஷாவுக்கு லிப் லாக்: மட்ட பாடலில் த்ரிஷாவுக்கு லிப் லாக் அடிப்பது போல இளைஞர் ஒருவர் எடிட் செய்த வீடியோ நேற்று சோஷியல் மீடியாவில் தீயாக பரவி அனைவரையும் ஷாக் ஆக்கியது. தியேட்டர் பிரிண்ட் வீடியோவை வைத்தே அப்படியொரு எடிட்டிங்கை அவர் போட்டிருந்தார். இந்நிலையில், ஒரிஜினல் ஹெச்டி வீடியோ பாடலையே டி சீரிஸ் நிறுவனம் தனது யூடியூப் சேனலில் தற்போது வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் இன்னும் என்னவெல்லாம் இந்த வீடியோ பாடலை வைத்து செய்யப் போகிறார்களா என்கிற அச்சம் தான் அதிகம் எழுந்துள்ளது.

டிரெண்டிங்கில் தெறிக்கப்போகுது: கோட் படத்தில் இடம்பெற்ற விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் பாடல்களை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்தது இந்த மட்ட பாடல் தான். அதற்கு காரணம் விஜய்யுடன் மஞ்சள் சேலையை அணிந்துக் கொண்டு த்ரிஷா போட்ட தர லோக்கல் குத்தாட்டம் தான். சமந்தாவை போல த்ரிஷாவும் ஒரே ஒரு குத்தாட்ட பாடலுக்கு ஆடியிருக்கிறாரே என ரசிகர்கள் பலரும் வாய் பிளந்து தியேட்டரில் பார்க்க ஆரம்பித்தனர். சிவகார்த்திகேயன் கிளைமேக்ஸில் வருவதற்கு முன்னதாக த்ரிஷாவின் ஸ்பெஷல் கேமியோ டான்ஸ் ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம் போட வைத்தது. இனிமேல் தினமும் டிவியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலை போட்டுத்தான் ஆடப் போவது கன்ஃபார்ம்.
வேறலெவல் தளபதி ஆட்டம்: நடிகர் விஜய் டீ ஏஜிங் முறையில் இளமையானவராக இந்த படத்தில் நடித்திருப்பார். அதை விட சவாலாக சும்மா நடந்து வரும் சீன்களில் மட்டும் நடிக்காமல், அவரே இறங்கி வேறலெவலில் ஸ்டெப்ஸ் போட்டு நடனம் ஆடியிருப்பதெல்லாம் ரசிகர்களுக்கான செம ட்ரீட் என்று தான் சொல்ல வேண்டும். இந்த பாடலுக்கு நடனமாட நடிகை த்ரிஷாவுக்கு 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோட் பட வசூல்: நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் 450 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை செய்துள்ளதாகவும் 500 கோடியை கோட் படம் நெருங்க வாய்ப்பிருக்குமா என்பது டவுட் தான் என்றும் கூறுகின்றனர். இந்த வாரம் மெய்யழகன், தேவரா உள்ளிட்ட பல படங்கள் வருவதால், கோட் படத்தின் காட்சிகள் அதிகளவில் குறைந்து விட்டதாக கூறுகின்றனர். விரைவில் ஓடிடியில் கோட் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











