AK The Tiger: புலி புலி புலி.. குட் பேட் அக்லி வீடியோ பாட்டே வந்துடுச்சு.. அஜித்தோட ஆக்ஷன பாருங்க!
சென்னை: குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் 12 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வசூல் மெல்ல மெல்ல குறையத் தொடங்கி இருக்கிறது. திங்கட்கிழமையான நேற்று வெறும் 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செவ்வாய்க்கிழமையான இன்று 1 கோடி முதல் 1.5 கோடி வசூல் வரும் என்கின்றனர்.
குட் பேட் அக்லி படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் பல பழைய பாடல்களை பயன்படுத்தியிருந்தார். இசைஞானி இளையராஜா தரப்பு அந்த பாடல்களை பயன்படுத்திய நிலையில், தங்களுக்கு காப்புரிமை கொடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பாடல்கள் இடம்பெற்ற படங்களின் தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெற்றே பயன்படுத்தினோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் டார்க்கி பாடி நடித்த 'புலி புலி புலி' வீடியோ பாடலை டி சீரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தியேட்டரே தெறித்தது: அஜித் குமாரின் மகனை அர்ஜுன் தாஸ் ஆட்கள் கொல்ல முயற்சிக்கும் போது, அவர்களை சேஸ் செய்துக் கொண்டு சென்று வீழ்த்தி தனது மகனை பக்கா சேஃப்டியுடன் அஜித் காப்பாற்றும் காட்சியில் மலேசிய பாடகரான டார்க்கியை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் செம சம்பவம் செய்து தியேட்டர்களை தெறிக்கவிட்டுள்ளார். அந்த பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி இருக்கிறது.
பழைய பாடல்களை பயன்படுத்துறாங்க: ஒரு படத்துக்கு இசையமைப்பாளர் இருந்தும் ஏன் பழைய பாடல்களை பயன்படுத்துறாங்க என்றும் அப்படி பயன்படுத்தும் போது தான் ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் ஆகுறாங்க. அந்தளவுக்கு அந்த காலத்தில் நாங்கள் பாடல்களை கொடுத்தோம் என கங்கை அமரன் சமீபத்தில் பேசியது பெரும் பரபரப்பை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியது. குட் பேட் அக்லி படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த பாடல்களை ரசிகர்கள் கொண்டாடுவதில்லை என்றும் ஒத்த ரூபா தாரேன் பாடலுக்கும், சுல்தானா பாடலுக்கும் தான் ரசிகர்கள் ரீல்ஸ் போட்டு டிரெண்ட் செய்தனர் என்றும் விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், 'புலி புலி புலி' பாடலுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு என்றும் அந்த பாடலும் வேறலெவலில் டிரெண்ட் ஆகி வருவதாகவும் அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அஜித்தின் ஆக்ஷன்: தனது மகனை காப்பாற்ற ஒரு காரில் இருந்து இன்னொரு போலீஸ் வாகனத்துக்கு அஜித் குமார் டூப் போடாமல் ஜம்ப் செய்து வரும் காட்சிகள் இந்த பாடலில் இடம்பெற்று ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியிருக்கும். அதே போல டார்க்கியின் குரல் மட்டும் ஆட்டம் என அனைத்துமே தியேட்டரில் மெட்டீரியல். படத்தை இன்னும் பார்க்காத ரசிகர்களுக்கும் பார்த்த அஜித் ரசிகர்களுக்கும் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ பாடல் ரிப்பீட் மோடில் பார்க்கப்பட்டு அதிக வியூஸ்களை குவிக்கும் என்கின்றனர்.
ஜிம்மில் ஒலிக்கும்: கல்யாண வீட்டுக்கு பாடல், சாவு வீட்டுக்கு பாடல் என ஏகப்பட்ட பாடல்கள் உருவாகி வரும் நிலையில், அஜித் குமாரின் இந்த ஏகே தி டைகர் பாடல் இப்பவே பல ஜிம்களில் ஒலிபரப்பாகி இளைஞர்களை உத்வேகப்படுத்தி வருவதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். சீக்கிரமே அந்த சுல்தானா பாடல் வீடியோவையும் வெளியிட்டால் புண்ணியமாக போகும் என்றும் பிரியா வாரியர் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











