ஜிவி பிரகாஷ் மற்றும் ராஜீவ்மேனன் கூட்டணியில்.. புது பாடல் வீடியோ !

சென்னை : சர்வம் தாளமயம் படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனன் இணையும் புதிய ப்ராஜெக்டின் பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

Recommended Video

Kaathodu Kaathanen - Jail First Single | GV Prakash, Abarnati

எந்தவித முன்னறிவிப்புமின்றி வெளியான இந்த பாடலால் இருவரது ரசிகர்களும் மிகுந்த ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

மிகவும் கலர்ஃபுல்லாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்த பாடல் தற்போது இணையதளத்தில் கலக்கி வருகிறது.

ஒளிப்பதிவாளர்

ஒளிப்பதிவாளர்

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பல படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். இவர் மணிரத்னத்துடன் இணைந்து பம்பாய், குரு, கடல் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரபலமானார்

பிரபலமானார்

மேலும் இவர் தமிழில் மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக மிகவும் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து வெகு ஆண்டுகளுக்கு பிறகு சர்வம் தாளமயம் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தார்.

நல்ல வரவேற்ப்பு

நல்ல வரவேற்ப்பு

இசையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சர்வம் தாளமயம் திரைப்படம் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சர்வம் தாளமயம் ஜிவி பிரகாஷ் நடித்த பல படங்களில் இது மிக முக்கியமான ஒரு படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

மற்றுமொரு ப்ராஜெக்டில்

மற்றுமொரு ப்ராஜெக்டில்

இயக்குனர் ராஜீவ்மேனன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கிய சர்வம் தாளமயம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் அடுத்த படத்தை எப்போது இயக்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து மற்றுமொரு ப்ராஜெக்டில் இணைந்து உள்ளார்.

"சே நோ டு ட்ரக்ஸ் "

ஜூன் 26 ஆம் தேதியான இன்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதை பொருளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராஜீவ் மேனன் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து "சே நோ டு ட்ரக்ஸ்" என்று விழிப்புணர்வு பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

வண்ண விளக்குகள்

வண்ண விளக்குகள்

ஒரே ஒரு அறையில் வண்ண வண்ண விளக்குகளால் முற்றிலும் நிறங்கள் நிரப்பப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த பாடல் தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பாடலாக உருவாகியிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார், மேலும் ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்தும் நடித்தும் உள்ளார். இயக்குனர் ராஜீவ் மேனன் இந்த பாடலுக்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஜிவி பிரகாஷுடன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார்.

இன்ப அதிர்ச்சியாக

இன்ப அதிர்ச்சியாக

முற்றிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இன்று வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். சர்வம் தாளமயம் படத்திற்கு பிறகு ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனன் இணைந்துள்ள இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X