ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் "அடியே" வெளியானது!

சென்னை : அசுரன்,சூரரைப்போற்று உள்ளிட்ட தரமான படங்களுக்கு வெரித்தனமாக இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ்குமார் சினிமாவில் கதாநாயகனாகவும் ஜொலித்துக்கொண்டுள்ளார்.

அந்த வகையில் இப்பொழுது இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் பேச்சுலர் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை திவ்யபாரதி நடித்துள்ளார்.

இளம் காதலர்களை பற்றிய படமாக உருவாகியுள்ள பேச்சுலர் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் அடியே தற்பொழுது வெளியாகி உள்ளது.

ஹீரோவாகவும் நடித்து வருகிறார்

ஹீரோவாகவும் நடித்து வருகிறார்

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் குமார் அதேசமயம் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்பொழுது அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் பேச்சுலர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

உண்மைத் தன்மை மாறாமல்

உண்மைத் தன்மை மாறாமல்

இளம் காதலர்களை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாகி உள்ளது. தற்போது உள்ள இளைஞர்கள் காதலை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை மிகக் கச்சிதமாக உண்மைத் தன்மை மாறாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக அறிமுக நடிகை திவ்யா பாரதி நடித்துள்ளார். மேலும் முனீஸ்காந்த் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

சில வசனங்கள் சர்ச்சைக்கு உள்ளானது

சில வசனங்கள் சர்ச்சைக்கு உள்ளானது

பேச்சுலர் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதில் இடம்பெற்ற சில வசனங்கள் சர்ச்சைக்கு உள்ளானது. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஃபர்ஸ்ட் சிங்கிள் "அடியே"

மிக விரைவிலேயே இந்த படம் திரையில் வெளியாக இருக்க இதன் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் பேச்சிலர் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் "அடியே" தற்பொழுது வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி மற்றும் வெங்கட்பிரபு இப்பாடலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் . ரொமான்டிக் பாடலாக உருவாகியுள்ள "அடியே" இப்பொழுது இளைஞர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இந்தப் பாடலை ஜிகேபி எழுதி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X