அனல் பறக்க... தெறிக்கவிட்ட அறிவு... ‘செஃல்பி‘ முதல் பாடல் வெளியானது !
சென்னை : ஜிவி பிரகாஷ் நடிக்கு செல்ஃபி திரைப்படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.
இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவர்களுடன் ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன்DG குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் மதிமாறன்
செல்ஃபி திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் நம்பிக்கைக்குரிய உதவி இயக்குனர் மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்

ரசிகர்களை கவர்ந்து
இயக்குனர்,நடிகர், பாடகர் தற்போது மிரட்டும் வில்லன் என மாஸ் காட்டி வரும் வருகிறார் கௌதம் மேனன். ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் வில்லனாக நடித்த கௌதம் இப்படத்தில் வில்லன் ரோலில் நடித்துள்ளார். கல்லூரி மாணவர்களின் இடஒதுக்கீடுக்கு பேரம் பேசும் தாதாவாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஊர்காரன்
செல்ஃபி திரைப்படத்திலிருந்து முதல் பாடலான ஊர்காரன் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு பாடி அவரே எழுதியுள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்தது மட்டுமில்லாமல் இசையும் அமைந்துள்ளார். அறிவின் அனல் தெறிக்கும் வரியில் ஜிவியின் இசையில் பாடல் சும்மா தரமாக உள்ளது.
அதிகம் மெனக்கெட்டு
ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இருவருமே இந்த படத்திற்காக அதிகம் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்கள் .நிறைய லோகேஷன்ஸ் வித விதமான காட்சிகள் என்று திரைக்கதையில் மிகவும் சுவாரஸ்யம் கூடும் வகையில் ட்விஸ்ட் நிறைய இருக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது . "செல்ஃபி" என்ற தலைப்பு கொண்டதால் நிறைய கேள்விகள் இந்த படத்தை பற்றி எழுந்து உள்ளது . பெயருக்கு ஏற்ற போல படத்தில் சம்பவம் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications