ரசிகர்கள் விரும்பி கேட்ட பாடல்.. நேரலையில் பாடிய ஜீவி பிரகாஷ் !
சென்னை: நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜீவி.பிரகாஷ், ரசிகர்கள் விரும்பி கேட்ட பாடல்களை யூடியூப் நேரலையில் பாடினார்.
Recommended Video
நேரலையை ஆரம்பிக்கும் முன் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்ட ஜீவி.பிரகாஷ் தான் அசுரன் படத்தில் இருந்து எள்ளு வாய பூக்களையே பாடலின் மூலம் பாடல் செஸ்ஸன் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும் இந்த நேரலையில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்பதிற்கேற்ற பாடலை கேளுங்கள் என கூறியிருந்தார்.

ரசிகர்களும் ஜீவி.பிரகாஷ் கேட்டு கொண்டதற்கு இணங்க தங்களின் விருப்பமான பாடல்களை பாடுமாறு நேரலையில் கேட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த நேரலையில் ரசிகர்கள் கேட்ட அனைத்து பாடல்களையும் தனது வீட்டில் இருந்த படியே டிஜிட்டல் இசை கருவிகளின் உதவியோடு பாடி அசத்தினார்.
இந்த பாடல் செஸ்ஸனுக்கு பின்பு இசையமைப்பாளர் ஜீவி.பிரகாஷை ரசிகர்கள் வாழ்த்தி நன்றி தெரிவித்தனர். தாங்கள் கேட்ட பாடல்களை பொறுமையாக பாடியதற்கு நன்றி தெரிவித்தும் ஜீவி.பிரகாஷின் இசையில் வரவிருக்கும் சூரரைப்போற்று படத்திற்கு வாழ்த்தும் தெரிவித்தனர் .

ஜீவி.பிரகாஷ் நேரலை இசை செஸ்ஸனை அவ்வளவாக நடத்துவதில்லை மிகவும் ரேர் தான். இந்த கொரன்டைன் நேரத்தில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தற்போது நேரலையில் வந்து இசை விருந்து கொடுத்து இருக்கிறார்.

இந்த கொரன்டைன் நேரத்தில் பல பிரபலங்களும் நேரலையில் வந்து தங்களின் பொன்னான நேரத்தை தங்கள் ரசிகர்களுடன் உரையாடி செலவிட்டு வருகின்றனர்.

கொரோனா ஏற்படுத்திய தாக்கம் அனைவரையும் வீட்டில் அடைத்துள்ளது சக நண்பர்களையும் உறவுகளையும் காண முடியாமல் அனைவரும் தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் பலரும் வீடியோ மூலமே தான் தங்களின் பிடித்தமானவர்களுடன் உரையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











