ஊமை செந்நாய் படத்தின் முதல் பாடலை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
சென்னை : மைக்கேல், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஊமை செந்நாய்.
இந்தப் படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. படத்திற்கு சிவா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

ஊமை செந்நாய் படம்
அறிமுக இயக்குநர் அர்ஜூன் ஏகலைவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஊமை செந்நாய், படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரையும் கனா காணும் காலங்கள் தொடர் புகழ் பர்மா சனம் ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

சண்டை காட்சி
இந்தப் படத்திற்காக சமீபத்தில் கண்டெயினருக்குள் சண்டை காட்சி ஒன்று பரபரப்பாக படம் பிடிக்கப்பட்டது. 35 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் மைக்கேல் தங்கதுரை சிறப்பாக நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிவா இசை
படத்திற்கு சிவா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். யார் இவன் என்ற அந்த மெலடிப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் ஷேர் செய்த பாடல்
இந்த பாடலை ஷேர் செய்துள்ள ஜிவி பிரகாஷ் இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் பாடலை வெளியிடுவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தை லைஃப் கோஸ் ஆன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

ரொமாண்டிக் பாடல்
சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ள இந்தப் பாடல் ரொமாண்டிக் பாடலாக அமைந்துள்ளது. கேட்பதற்கே மிகவும் இனிமையாக உள்ளது. பாடலை பிரகாஷ் பாஸ்கர் எழுதியுள்ள நிலையில், பாடல் வரிகளும் சிறப்பாக அமைந்துள்ளது. சிவா இந்தப் பாடலை சிறப்பாக அமைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஷனம் ஷெட்டி நாயகி
படத்தில் ஷனம் ஷெட்டி நடித்துள்ள நிலையில் அவருக்கும் நாயக மைக்கேலுக்கும் இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் சிறப்பான வகையில் படத்தில் நடித்துள்ளதாகவும் படம் வெற்றிப்படமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.'


Click it and Unblock the Notifications











