திடீரென ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்.. இப்போ என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிய போவதாக அறிவித்த நிலையில் அதன் பின்னர் சில நாட்கள் அமைதியாக இருந்து வந்தார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வரிசையாக தொடர்ந்து மூன்று படங்கள் வெளியாகி மூன்றுமே படுதோல்வியை சந்தித்தன. தனது அடுத்த படத்தை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ள ஜி.வி. பிரகாஷ், தான் இசையமைக்கும் படங்களில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

gv prakash thangalaan lucky bhaskar chiyaan vikram dulquer salman

இசையமைப்பாளராக பல வெற்றிப் படங்களுக்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தரமாக கொடுத்து வரும் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்துக்காக கடுமையாக உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் விவாகரத்து: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் பள்ளிப் பருவத்திலிருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவி திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரு குழந்தை இந்த நட்சத்திர தம்பதியினருக்கு உள்ளது. ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள பெரிய முடிவு செய்துவிட்டனர்.

ஹாட்ரிக் தோல்வி: இந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல், கள்வன் மற்றும் டியர் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. வாரா வாரம் புதிய படங்களை ரிலீஸ் செய்து வந்த ஜி.வி. பிரகாஷை பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில், அதற்கெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதி உடன் இணைந்து கிங்ஸ்டன் என்னும் படத்திலும் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். மேலும், காதலிக்க யாரும் இல்லை படத்தில் வைசா வில்சன் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

தங்கலான் ஃபர்ஸ்ட் சிங்கிள்: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பசுபதி நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடியாகி தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என ஜி.வி. பிரகாஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தங்கலான் படம் தொடர்ந்து தள்ளிப் போய் வரும் நிலையில், அந்த படத்திலிருந்து ஒரு சூப்பர் அப்டேட்டை கொடுத்து சியான் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.

gv prakash thangalaan lucky bhaskar chiyaan vikram dulquer salman

துல்கர் சல்மான் ரசிகர்களுக்கும் ட்ரீட்: மேலும், துல்கர் சல்மான் நடித்து வரும் லக்கி பாஸ்கர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடியாகி அந்த பழத்தின் தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றும் ஜி.வி. பிரகாஷ் அறிவித்துள்ளார். சொந்த பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்த ஜி.வி. பிரகாஷ் மீண்டும் சினிமா பக்கம் தனது முழு கவனத்தை திருப்பியுள்ள நிலையில், தங்கலான் படத்தின் இசை முழுமை பெற்று விரைவில் படம் வெளியாகும் அறிவிப்பை பா. ரஞ்சித் வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர். ஜி.வி. பிரகாஷின் அடுத்தடுத்த படங்களும் கூடிய சீக்கிரமே ரெடியாகி வெளியாகும் என்றும் கூறுகின்றனர். தங்கலான் ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த வாரத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X