முதல்முறையாக கோயம்புத்தூரில்.. Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரி!

கோவை: கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "Return Of The Dragon" இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டமான முறையில், கோயம்புத்தூரின் மிகப்பெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

தமிழக Independent Music துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் ஐகானாக மாறியுள்ளார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

Hip Hop Aadhi Music Concert

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “Return Of The Dragon” எனும் பெயரில் லண்டன், மலேசியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் Music Concert யை நடத்தவுள்ளார்.

சொந்த ஊரில் இசைக்கச்சேரி: Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து இந்த Music Concert யை பிரம்மாண்டமாக கோயம்புத்தூரில் நடத்தவுள்ளன. இந்த Music Concert ல் கோயம்புத்தூர் ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றது. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த Music Concert, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது.

பக்கா பாதுகாப்பு: இந்த Music Concert ல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற Concert ல் ஏற்பட்ட சிக்கல்கள், எதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை, ஆன்லைனில் Paytm ஆப் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

கை கொடுத்த PT சார்: கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் இந்த ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த PT சார் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுத்தந்தது. தியாகராஜன், காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பிரபு, பாக்கியராஜ், பாண்டியராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த படத்தில் நடித்திருந்தனர். அடுத்ததாக அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'கடைசி உலகப் போர்’ திரைப்படத்தின் புரமோஷன்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X