யம்மா யம்மா.. அஞ்சல.. பாடல்களை ஓவர்டேக் செய்ததா ரெட்ரோ படத்தின் “கண்ணாடி பூவே”? சூர்யா எப்படி?
சென்னை: ரெட்ரோ படத்தின் முதல் பாடல் அட்டகாசமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு அப்படியே எதிர்மாறாக ஒரு அழகான காதல் வலியுடன் கூடிய பாடலை வெளியிட்டு சூர்யா ரசிகர்களை ரெட்ரோ மோடுக்கே கொண்டு சென்றுள்ளார் சந்தோஷ் நாராயணன்.
கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான மன்னிப்பு பாடல் பலரையும் கவர்ந்தது. இந்நிலையில், அந்த பாடலை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு ஒரு தரமான சம்பவமாக "கண்ணாடி பூவே" பாடல் வெளியாகி இருக்கிறது.

"அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல", "யம்மா யம்மா காதல் பொன்னம்மா" என சூர்யாவின் காதல் வலி நிறைந்த பாடல்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ள நிலையில், கேட்ட உடனே ரசிகர்களை இந்த "கண்ணாடி பூவே" பாடல் கவர்ந்ததா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

வெளியானது ரெட்ரோ பாடல்: இந்த ஆண்டு மே 1ம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ படம் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். "மாமதுரை அன்னக்கிளி", "ரகிட ரகிட" பாடல்களை போல ஒரு தரமான குத்து பாடலை சூர்யா படத்துக்கு ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், காதல் வலி நிறைந்த பாடலை இறக்கி ரசிகர்களை உருக வைத்துள்ளார்.

கண்ணாடி பூவே: இந்த படத்தில் சூர்யாவுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இடையேயான காதல் தான் ரசிகர்களை தியேட்டரில் கட்டிப்போட காத்திருக்கிறது. படத்தின் மையக்கருவை முன் வைக்கும் விதமாக இந்த பாடலை களமிறக்கியுள்ளனர். சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலை வெளியிட்ட அடுத்த நொடியே ரசிகர்கள் அதனை டிரெண்ட் செய்யத் தொடங்கி விட்டனர்.
அந்த பாடல்களை ஓரங்கட்டியதா?: ஏழாம் அறிவு படத்தில் வரும் "யம்மா யம்மா காதல் பொன்னம்மா" மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற "அவ என்ன என்ன தேடிவந்த அஞ்சல" உள்ளிட்ட பாடல்கள் எவர்க்ரீன் ஹிட் என்றே சொல்லலாம். அந்த பாடல்களை இந்த பாடல் ஓரங்கட்டுமா என்பது போக போகத்தான் தெரியும். ஆனால், பாடல் வரிகளுக்காக ரசிகர்கள் மனதில் என்றென்றும் நின்று பேசும். முதல் முறை கேட்கும் போதே ஒரு மயக்கத்தையும் வலியையும் இந்த பாடல் கடத்துகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.



Click it and Unblock the Notifications











