twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் இயக்குநரின் பெயரை மகனுக்கு வைத்தேன் ஆனால் கூப்பிட்டதில்லை - டிஎஸ்ஆர் சுபாஷ்

    |

    Recommended Video

    RV Udayakumar Speeh at UTRAAN Audio launch

    சென்னை: உற்றான் படத்தின் ஆடியோ டிரைலர் வெளியீட்டு விழாவில் சில உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றன. ஹீரோ ரோஷனின் பெயர் பற்றிய தகவல்களை அவருடைய அப்பா டிஎஸ்ஆர் சுபாஷ் பகிர்ந்து கொண்டார் அதைக்கேட்டு இயக்குநர் ஆர்.வி உதயகுமார் நெகிழ்ந்து போனார். விழாவில் பேசிய டிஎஸ்ஆர் சுபாஷ், என்னை கலையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்தான் அதன் காரணமாகவே என்னுடைய மகனுக்கு உதயகுமார் என்று பெயர் வைத்தோம். ஆனாலும் என்னால் பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை. வீட்டில் செல்லமாக ரோஷன் என்று கூப்பிட்டோம் என்று கூறினார். அதைக்கேட்டு ஆர்.வி உதயகுமார் நெகிழ்ச்சியடைந்தார்.

    சாய் சினிமாஸ் தயாரிப்பில், ஓ.ராஜா கஜினி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் உற்றான். கடந்த 1994 சென்னையில் ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார் இளம் நாயகன் ரோஷன்.

    இவர் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான ரவீந்திர தாஸின் பேரனும், தற்போதைய தலைவரும், பிரபல திரைப்பட படத்தொகுப்பாளருமான, தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷின் மகன். ரோஷன் பற்றி பேசிய சுபாஷ், உற்றான் படத்தின் மூலம் அறிமுகம் ஆகும் ரோஷனின் முழு பெயர் ரோஷன் உதயகுமார்.

    பெயர் சொல்லி கூப்பிட்டதில்லை

    பெயர் சொல்லி கூப்பிட்டதில்லை

    என்னுடைய இயக்குனரின் பெயரை வைத்ததால் என் மகனுக்கு வைத்தாலும் என்னால் பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை. வீட்டில் செல்லமாக ரோஷன் என்று கூப்பிட்டோம். இயக்குநர் பெயரை சொல்லி நான் இன்றுவரை என் மகனை அழைத்ததே இல்லை. ரோஷன் உதயகுமார் என்று மாற்றி முறையாக பள்ளியில் பதிவு செய்தோம்.

    ரோஷன் உதயகுமார்

    ரோஷன் உதயகுமார்

    பள்ளி முதல் பாஸ்போர்ட் வரை ரோஷன் உதயகுமார் என்றே உள்ள நிலையில், தற்போது உற்றான் படத்தின் மூலம் அறிமுகம் ஆகும் சூழலில், படத்தில் எப்படி பெயர் போடலாம் என்று வரும்போது, என் இயக்குனர் உதயகுமார் சாரிடம் கேட்டேன். அவர் ரோஷன் என்பதே நன்றாக உள்ளது என்று சொன்னார். அந்த பெயரை வைத்து விட்டோம் என்றார்.

    குருவும் சிஷ்யனும்

    குருவும் சிஷ்யனும்

    விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், எங்களுடைய குடும்ப நண்பர் ரவீந்திர தாஸ். அவரை நான் டாடின்னும், அம்மாவை மம்மின்னும்தான் எப்பவும் கூப்பிடுவேன். அவர் தான் எனக்கு சிறு வயதில் இருந்தே குரு. நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே அவரது எழுத்துக்களை படித்துப்பார்த்து வளர்ந்தேன். பாடல்கள், கவிதைகளையயும் எழுதத் தொடங்கினேன்.

    எனக்கு பெருமை

    எனக்கு பெருமை

    பின்னாளில், ரவீந்திரதாஸ் சாரின் மகனான தோழர் சுபாஷுக்கு நான் குருவாக ஆனேன். அதனால் தானோ என்னவோ, அவரது மகனுக்கு என்னுடைய பெயரையும் சேர்த்து ரோஷன் உதயகுமார் என்று பெயர் வைத்துள்ளார். அது எனக்கு கூடுதல் பெருமை. இந்த பெயரை வைத்தது ரவீந்திரதாஸின் நெருங்கிய நண்பர் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்தான்" என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். விரைவில் திரையில் வெளிவரும் உற்றான் படத்திற்கு நம்முடைய ஃபிலிமிபீட் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    English summary
    The director R.V.Udayakumar introduced me in the Cinema Industry. That’s why we named my son 'Udayakumar'. I couldn't name my son because he had my director's name. But our house members was called 'Roshan'. I have never called my son to this day by naming the director. DSR Subhash said about hero, "Roshan".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X