விஜயகாந்த் படத்திற்கு மியூசிக் போடணும்... வாழ்நாள் ஆசையை கூறிய ஹிப்ஹாப் ஆதி!
சென்னை : இசையமைப்பாளர்,நடிகர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்டு சினிமாவில் கலக்கிக் கொண்டுள்ளார் ஹிப்ஹாப் ஆதி.
மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு இரண்டாவது படமாக சிவக்குமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜயகாந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது தன்னுடைய வாழ்நாள் ஆசை என கூறியுள்ளார்.

ஹீரோவாக
இசையமைப்பாளர் ஆதி இப்பொழுது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் அந்த வகையில் மீசையமுறுக்கு படத்திற்கு பிறகு இரண்டாவது திரைப்படமாக சிவகுமாரின் சபதம் என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு இசையமைத்தும் உள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

தெலுங்கிலும் இசையமைக்க
துள்ளலான ஹிப் பாப் இசையின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு தெலுங்கிலும் இசையமைக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிப்பு ஒருபுறம் இசையமைப்பது ஒருபுறம் என செம பிஸியாக இருக்கும் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் அதிக கவனம் செலுத்துவதால் மிகக் குறைந்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார்.

வாழ்நாள் ஆசை
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுவரை பலரும் அறியாத தன்னுடைய வாழ்நாள் ஆசை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் படங்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேபோலத்தான் ஹிப் ஹாப் ஆதியும் சிறுவயது முதலே விஜயகாந்தின் திரைப்படங்களில் மிகவும் விரும்பிப் பார்க்கக் கூடியவராக இருந்துள்ளார்.
Recommended Video

விஜயகாந்த் படத்திற்கு இசையமைக்க வேண்டும்
இந்த நிலையில் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான பிறகு விஜயகாந்தின் ஒரு படத்திற்காக இசையமைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துள்ளார். அதற்கான சந்தர்ப்பம் கிடைக்க "தமிழன் என்று சொல்" என்ற படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் முழுமை பெறாமல் போக இன்றுவரை விஜயகாந்த் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் உள்ளது என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஹிப்ஹாப் ஆதி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











