தனுஷ் படத்தில் நடிக்க கதை கேட்கமாட்டேன்: சத்யராஜ்
தனுஷ் படத்தில் நடிக்க கேட்டால் கதை கூட கேட்கமாட்டேன் உடனே ஒத்துக்கொள்வேன் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். சிவகார்த்திக்கேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தினை பொன்ராம் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட தனுஷ் பெற்றுக்கொண்டார். பின்னர் சத்யராஜ் உள்ளிட்ட அனைவரும் படத்தைப் பற்றி பாராட்டி பேசினார்கள்.

சிவாஜி டூ சிவகார்த்திக்கேயன்
சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோர் நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தனர். ரஜினிகாந்த் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். இப்போது நடிகர்களுக்கு தொலைக்காட்சி நல்ல பிளாட்பார்ம் ஆக இருக்கிறது. தொலைக்காட்சியில் இருந்து வந்து சினிமாவில் ஜெயித்திருக்கிறார் சிவகார்த்திக்கேயன். சிவகார்த்திக்கேயனுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

பொறமைப் பட்ட தனுஷ்
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் ‘சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கிறது என்றார். இந்தப் படத்தில் சத்யராஜ் சார் நடித்திருக்கிறார். இதுதான் பொறாமைக்கு காரணம். என் படத்தில் எப்படியாவது சத்யராஜை நடிக்க வைக்க பலமுறை முயன்றேன். அவரது அலுவலகத்தில் கால்ஷீட்டுக்காக காத்திருந்தேன். ஆனால் கிடைக்கவில்லை என்றார்.

கதை கேட்க மாட்டேன்
இதற்கு பதில் சொன்ன சத்யராஜ், அடுத்த தனுஷ் படத்தில் நடிக்க அழைக்கும்போது கதைகூட கேட்கமாட்டேன். உடனடியாக கால்ஷீட் தருவேன். இது உறுதி. என் வார்த்தையை கண்டிப்பாக காப்பாற்றுவேன் என்றார்

ஜாக்பாட் அடிச்சிருச்சே
இதைக் கேட்ட தனுஷ் எனக்கு ஜாக்பாட் அடித்த சந்தோசம் ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் நானும் சத்யராஜ் அவர்களும் இணைந்து நடிப்போம் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











