மாமனிதனுக்கு மாயாஜாலம் காட்டிய இசைஞானி - பத்து நிமிடத்தில் 5 பாடல் கம்போஸிங்

Recommended Video

Mamanithan shooting spot

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் திரைப்படத்தின் பாடல் கம்போஸிங்கை 10 நிமிடத்தில் முடித்து கொடுத்துவிட்டார் இளையராஜா. ஒரு புறம் பாடலாசிரியர்கள் பாடல் வரிகளை எழுத, உடனே இளையராஜா அந்த பாடல் வரிகளுக்கான ட்யூன்களை கம்போஸ் செய்து மாயாஜாலம் நிகழ்த்தி விட்டார்.

இசைஞானி இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா தான். அவருடன் போட்டியிட்டு யாராவது வெல்ல முடியுமா. இசையாலேயே நம்மை எல்லாம் ஆட்டி வைக்கவும் அடக்கி வைக்கவும் அவரால் மட்டுமே முடியும். இதற்கு சான்றாக நடைபெற்றுள்ளது ஒரு இனிய சம்பவம்.

Ilaiyaraaja made music magic for Maamanithan Film

வான்சன் மூவிஸ் நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து மாமனிதன் எனும் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், காயத்ரி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

சீனு ராமசாமி இயக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகிவரும் மூன்றாவது திரைப்படம் மாமனிதன்.

இப்படத்தின் பாடல் ரெகார்டிங் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. ரெகார்டிங் ஸ்டுடியோவில் இளையராஜா நுழைந்த பத்தே நிமிடத்தில் ஐந்து பாடல்களுக்கான ட்யூன்களை கம்போஸ் செய்து யுவன் கொடுத்துவிட்டார். இதில் இரண்டு பாடல்களுக்கு பழனி பாரதி பாடல் வரிகளை எழுத மூன்று பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார் பா.விஜய்.

அவர்கள் பாடல் வரிகளை எழுத ஒரு புறம் இளையராஜா ட்யூன் கம்போஸ் செய்ய 10 நிமிடங்களில் பாடல் பதிவை முடித்து மேஜிக் செய்துள்ளார் இளையராஜா. இதனை பெருமையோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் யுவன்சங்கர்ராஜா. இந்த ரெகார்டிங் நடைபெறும் போது இயக்குனர் சீனு ராமசாமி கூட அங்கே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா அவர்கள் 1980களில் இருந்தே தனக்கு விருப்பமான பாடலாசிரியர்களை வைத்து தான் பாடல்களை உருவாக்கி வருகிறார். இப்படமும் அது போலவே முடிக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவால் மட்டுமே இது போன்ற மேஜிக் செய்யமுடியும் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார்.

ராஜா என்றுமே ராஜா தான். அவர் கைய வச்சா ராங்கா போனதில்லே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X