Ilaiyaraaja: இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன தெரியுமா?

சென்னை: இசைஞானி இளையராஜா தனது சிம்பொனி இசையை லண்டனில் உள்ள பிரமாண்ட அரங்கில் இசையமைத்து வெளியிட்டார். நாடு திரும்பிய அவர் தனது சிம்பொனி இசையை யாரும் டவுன்லோடு செய்து கேட்கக் கூடாது என்றும் பல இடங்களுக்குத் தானே சென்று இசையமைத்து நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும் கூறினார்.

இளையராஜாவின் சிம்பொனி 4 பாகங்களாக 15 நிமிடங்களுக்கு ஒன்று என்கிற வீதத்தில் வாசிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. வெளிநாட்டுக் கலைஞர்கள் இளையராஜாவின் சிம்பொனியில் இடம்பெற்று வாசித்தது குறிப்பிடத்தக்கது.

Ilaiyaraaja opens up Lydian Nadhaswaram involvement in Symphony making

இன்கிரெடிபிள் இந்தியா போல நான் இன்கிரெடிபிள் இளையராஜா என சிம்பொனி இசையமைக்க செல்வதற்கு முன் இளையராஜா கூறியிருந்தார். இந்நிலையில், இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் தான் இளையராஜாவுக்கு சிம்பொனி எழுத உதவினார் என வதந்தி ஒன்று பரவிய நிலையில், அதற்கு இளையராஜாவே விளக்கம் கொடுத்துள்ளார்.

சிம்பொனி அமைத்த இளையராஜா: அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இளையராஜா பல ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கி இசை தேவனாகவே வாழ்ந்து வருகிறார். இசைஞானி என ரசிகர்களால் கொண்டாப்படும் இளையராஜா இசையுலகின் உன்னதம் எனக் கருதப்படும் நிகரற்ற சிம்பொனி இசையை உருவாக்கி உள்ளார். அதில், இசை கண்டக்டராக மைக்கேல் என்பவர் செயல்பட சுமார் 77 இசை கலைஞர்கள் சுமார் 1 மணி நேரம் 4 பாகங்களாக இளையராஜாவின் அசைவுகளுக்கு இணங்க சிம்பொனி இசையை வாசித்து அசத்தினர்.

லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி எழுதினாரா?: இளையராஜாவின் சிம்பொனி இசை பற்றிய பேச்சுக்கள் உலகம் முழுவதும் ஒலித்து வரும் நிலையில், இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரத்தை தான் துணைக்கு வைத்துக் கொண்டு இளையராஜா சிம்பொனி இசையை எழுதச் சொல்லியிருக்கிறார் என்கிற வதந்தி ஒன்று திடீரென சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், அதற்கு உடனடியாக செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

சினிமா பிஜிஎம் போட்டிருந்தான்: லிடியன் நாதஸ்வரம் என்னுடைய மாணவன் தான். இசையை என்னிடம் கற்று வருகிறான். ஒருமுறை அவன் சிம்பொனி ஒன்றை இசையமைத்திருக்கிறேன் என என்னிடம் வந்து ஒரு இசையை இசையமைத்துக் காட்டினான். சில நொடிகள் கேட்டதுமே நிறுத்து எனச் சொன்னேன். இது சிம்பொனி இசையல்ல சினிமா பிஜிஎம் என அவனுக்கு அறிவுரை வழங்கினேன். அதுமட்டும் தான் மற்றபடி சிம்பொனி இசையை யாரையும் வைத்து எழுதவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

சொந்தக் காலில் நடப்பவன்: இத்தனை வருடங்களாக இசைத்துறையில் சொந்தக் காலில் நடப்பவன் நான். யாருடைய உதவியையும் எதற்கும் பயன்படுத்தியதில்லை. சொந்தக் கால் என்றால் செருப்பு கூட இல்லாத வெறுங்காலில் நின்று வளர்ந்தவன் நான் என தனது ஸ்டைலில் தக் லைஃப் பதிலையும் இளையராஜா கூறியுள்ளார்.

பிரபலங்கள் பாராட்டு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை பல சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இளையராஜாவின் சிம்பொனி இசைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் தமிழ்நாட்டு மக்கள் அந்த சிம்பொனி இசையை கேட்பதற்காக கச்சேரி ஒன்றை இளையராஜா நடத்தவுள்ளதாகவும் வெளிநாடுகளுக்கும் சென்று அவர் சிம்பொனியை வாசித்துக் காட்டப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இளையராஜா இந்த வயதிலும் தற்பெருமை பேசி வருகிறார் என்கிற ட்ரோல்களும் அவரது பேச்சை மட்டுமே சுட்டிக்காட்டி சிலர் முன் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X