Ilaiyaraaja: 100 ஆண்டு இந்திய சினிமாவில் என்னை போல யாருமில்லை.. இளையராஜாவின் ’தக் லைஃப்’ ட்வீட்!

சென்னை: இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா 100 ஆண்டு இந்திய சினிமாவில் தன்னை போல ஒரு இசைக் கலைஞன் இல்லை என பதிவிட்டு தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார். அன்னக்கிளி படத்தில் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான படங்களுக்கு 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தி இசை வெள்ளத்தில் இத்தனை ஆண்டுகள் நனையவைத்தவர் தான் இளையராஜா.

81 வயதிலும் இசைத்துறையில் புதிதாக சாதனைகளை படைக்க வேண்டும் என அவர் காட்டும் முனைப்பும் புதிய படங்களுக்கு அவர் கொடுத்து வரும் தன்னிகரற்ற இசையும் எப்போதுமே ரசிகர்களுக்கு அலாதியான இன்பத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

ilaiyaraaja yuvan shankar raja

சமீபத்தில், வெளிநாடுகளுக்குச் சென்று இசைக்கச்சேரிகளை நடத்தி வரும் இளையராஜா தற்போது தனக்கான டிரம்பட்டை தானே வாசித்துக் கொள்கிறேன் என்றும் ஆனாலும், அதுவும் சுகமான ஒரு அனுபவம் தான் என்றும் பதிவிட்டுள்ளார்.

காப்புரிமை சர்ச்சை: இந்த ஆண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற "கண்மணி அன்போடு காதலன்" பாடலுக்கு இளையராஜா காப்புரிமை கேட்டு நோட்டீஸ் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது. மேலும், ரஜினிகாந்தின் கூலி படத்தின் அறிமுக வீடியோவில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் இசைக்கும் காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். லப்பர் பந்து படக்குழுவினர் பயன்படுத்திய இளையராஜா பாடல்களுக்கு உரிய காப்புரிமையை கொடுத்து மரியாதையும் செலுத்திய நிலையில், அந்த படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பவில்லை. இந்த ஆண்டு பல படங்கள் ஹிட் அடிக்க காரணமே இளையராஜா தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், திரைத்துறையில் காப்புரிமை பிரச்சனை அதிகளவில் கிளம்ப காரணமும் இளையராஜா தான் என தனுஷ் - நயன்தாரா விவகாரத்திலும் இளையராஜாவை இழுத்துவிட்டு ட்ரோல்கள் பறக்கின்றன.

ilaiyaraaja yuvan shankar raja

100 ஆண்டு இந்திய சினிமாவில்: தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறேன் என்றும் அதுவும் நல்லாத்தான் இருக்கு என இளையராஜா பதிவிட்டு, 100 ஆண்டு இந்திய சினிமாவில் சொந்தமாக "இசையை எழுத்து வடிவில் எழுதக்கூடிய ஒரே இசைக்கலைஞன் இசைஞானி இளையராஜா" மட்டும்தான் என்பது இன்றுவரை பலருக்கும் தெரியாது.. என தன்னைப்பற்றிய குறிப்பை தனது ட்விட்டர் பக்கத்திலேயே தானே கார்டு வடிவில் போட்டு பிரபலப்படுத்தியுள்ளார் இளையராஜா.

பாராட்டும் ரசிகர்கள்: இசையுலகில் நீங்கள் செய்த அபார சாதனைகளை யாருமே எந்தக் காலத்திலும் தொடமுடியாது அய்யா என்றும் இசைஞானி, மேஸ்ட்ரோனா எப்போதுமே பக்கா மாஸ் தான் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இசைக்கு எழுத்து இருக்கிறது என்பதே இன்று தான் எனக்குத் தெரியும் சார் என்றும் பலவிதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

இளையராஜா பயோபிக் என்னாச்சு?: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோபிக் உருவாகி வருவதாகவும் தனுஷ் அதில் இளையராஜாவாக நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. டிராப் ஆகிவிட்டதா? என்றும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. அதற்கு காரணம் நடிகர் தனுஷ் அடுத்து இட்லி கடை படத்தை முடித்து விட்டு அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்கப் போவதாக பூஜை போட்டு அறிவித்ததுதான் என்கின்றனர். இளையராஜாவின் பயோபிக்கை சீக்கிரமே காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X