“என்றும் ராஜா“ இசைஞானியின் புது டியூன்… ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ட்ரீட் !
சென்னை : இசைஞானி இளையராஜா தனது ரசிகர்களுக்காக ஒரு டியூனை வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இந்த டியூனை முழுக்க முழுக்க தனது ரசிகர்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

இசை மேதை
மனதை கட்டிப்போடும் மந்திர வித்தையை தெரிந்தவர் இசைஞானி இளையராஜா. காதல்,சோகம், பிரிவு, ஏக்கம், தவிப்பு,மகிழ்ச்சி என அனைத்தையும் இசையின் புகுத்தி செவியில் ரீங்காரமிடுவார். அவர் ஓர் ஒப்பற்ற இசை மேதை, இசைத் துறையில் அவர் நிகழ்த்திய பிரமிக்கத்தக்க சாதனைகளைக் குறித்து பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்னும் பல்லாயிரம் பக்கங்கள் எழுத காத்திருக்கின்றன.

மெலடி, துள்ளல்
தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் இசையுடன் செலவழித்து தன்னை புத்துணர்வாக வைத்திருக்கிறார் ராஜா. ஆத்மார்த்தமான மெலடி அல்லது துள்ளல் என எதுவாக இருந்தாலும், இளையராஜாவின் ரசிகர்களுக்கு அவையெல்லாம் பெரும் விருந்தாக இருக்கின்றன.

ரசிகர்களுக்காக
இந்நிலையில் ,இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு டியூனை வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த டியூன் இன்று காலை தான் தனக்கு தோன்றியது என்றும் இதை முழுக்க முழுக்க தனது ரசிகர்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இளையராஜாவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டைம் சதுக்கத்தில்
இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ஒளிபரப்பு செய்ய ஒரு செயலி உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கான விளம்பர படத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பர படம் டைம்ஸ் சதுக்கத்தில் உயரமான கட்டிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது இதை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினார்கள்.


Click it and Unblock the Notifications











