துபாயில் நடந்த இசைஞானி – இசைப்புயல் சந்திப்பு...என்ன விஷயம் தெரியுமா?

துபாய் : இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் துபாயில் சந்தித்து கொண்ட போது எடுத்த போட்டோவை ஏ.ஆர்.ரஹ்மானே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து இசை ரசிகர்கள் ஆச்சரியத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

இந்திய திரையிசையின் மிகப் பெரிய இசை ஜாம்பவான்களாக இருக்கும் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் தங்களின் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைக்கும் பணிகளில் இருந்து வருகிறார். இளையராஜாவும் பல சினிமா படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

இளையராஜா மீதான அன்பு

இளையராஜா மீதான அன்பு

ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன் இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பாளராக இருந்தார். இளையராஜாவின் பல பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்டு வாசித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் ஆன பிறகு அவரும் சரி, இளையராஜாவும் சரி தான் ஒன்றாக பணியாற்றிய கால நினைவுகள், பழைய போட்டோக்களை அடிக்கடி பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 துபாயில் இசை நிகழ்ச்சி

துபாயில் இசை நிகழ்ச்சி

ஏ.ஆர்.ரஹ்மான் பெண் இசை கலைஞர்களைக் கொண்ட ஃபிர்தெளஸ் ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக்குழுவை நடத்தி வருகிறார். இந்த இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி துபாய் எக்ஸ்போ 2020 ல் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது துபாயில் இருந்து வருகிறார். நேற்று இரவு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

 இன்ப அதிர்ச்சி கொடுத்த இளையராஜா

இன்ப அதிர்ச்சி கொடுத்த இளையராஜா

இந்நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட லைவ் இசை கச்சேரிகளை இளையராஜா மீண்டும் நடத்த துவங்கி உள்ளார். துபாயில் லைவ் இசைக்கச்சேரி நடத்துவது தொடர்பாக இளையராஜாவும் தற்போது துபாய் சென்றுள்ளார். துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்தெளஸ் ஸ்டூடியோவிற்கு திடீர் விசிட் கொடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளையராஜா. இவர்கள் சந்தித்த போது எடுத்துக் கொண்ட போட்டோவை தான் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

இசை ராஜாவும், இசை கடவுளும்

இசை ராஜாவும், இசை கடவுளும்

அதோடு, எங்களின் ஃபிர்தெளஸ் ஸ்டூடியோவிற்கு மாஸ்ட்ரோ இளையராஜாவை வரவேற்பதில் மகிழ்ச்சி. எங்களின் ஆர்கெஸ்ட்ராவின் இசைக் கருவிகளில் அவர் ஏதாவது இசை அமைப்பார் என நம்புகிறேன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சந்தோஷத்தில் இசை பிரியர்கள், இசையும் இசையும். எத்தனை அழகு. இசை ராஜாவும் இசை கடவுளும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X