மனம் விட்டு புலம்பிய சங்கர்.. ரஜினிகாந்த் எடுத்த முயற்சி.. விரைவில் இந்தியன் 3 ரிலீஸ்!

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த சங்கரின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் 2 வெளியானது. ஆனால், படம் வெளியான முதல் நாளே படத்திற்கு வந்த மோசமான விமர்சனத்தால், அந்த படம் தோல்வித் திரைப்படமாக மாறியது. ஷங்கர் இயக்கிய எந்த திரைப்படமும் இப்படி ஒரு மோசமான விமர்சனத்தை சந்தித்தது இல்லை. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், இரண்டாம் பாகமே மொக்கை இதில் மூன்றாம் பாகமா என இணையத்தில் கருத்துக்கள் பரவியதால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இதன் பின் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதில், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என பலர் நடித்திருந்தனர். பல பிரச்சனைகளுக்கு பிறகு, பெரும் எதிர்பார்ப்புக்கும் மத்தியில் இப்படம் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்தபடி இல்லாததால் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

Indian 3 Shankar Rajinikanth
Photo Credit:

இந்தியன் 3: இந்த படத்தைத் தொடர்ந்து ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுத, ஷங்கர் இயக்கி இருக்கிறார். ரூ.400 கோடி செலவில் உருவான கேம் சேஞ்சர் படம் பான் இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இந்த படமும் மோசமான விமர்சனத்தை பெற்றது. கேம் சேஞ்சர் படத்தை பார்த்த பலரும் சங்கருக்கு என்ன ஏன் இப்படி ஒரு படத்தை எடுத்தார் என பேசி வருகின்றனர். கேம் சேஞ்சர் படத்தை முடித்துவிட்டு, இந்தியன் 3 படத்திற்கான வேலையை தொடங்குவேன் என சங்கர் கூறியிருந்தார். ஆனால், இந்த இரண்டு படமும் தோல்வி அடைந்து விட்டதால், இந்தியன் 3 படத்தை வெளியிட்டு மேலும், நஷ்டமடை தயாரிப்பு நிறுவனம் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி எடுத்த முயற்சி: இந்நிலையில், கடந்த வாரம், எம்.பி சு.வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் விழா நடைபெற்றது. இதில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த விழாவில் இயக்குநர் சங்கர், ரஜினிகாந்திம் 'இந்தியன் 3' குறித்த தனது ஆதங்கத்தைத் கொட்டி தீர்த்துள்ளார். அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் களத்தில் இறங்கி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருடன் கலந்து பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின் 'இந்தியன் 3' படத்திற்கான எஞ்சியுள்ள சில நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. திட்டமிட்டபடி அப்படி நடந்து முடிந்தால் இந்த ஆண்டிலேயே 'இந்தியன் 3' வெளியாக வாய்ப்பு உள்ளது. இரண்டாம் பாகத்தில் எந்த தவறும் இதில் இருக்கக்கூடாது என சங்கர் முனைப்புடன் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X