பொன்னியின் செல்வன் பாடல்கள் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறதா? ஏ.ஆர். ரஹ்மான் போட்ட ட்விஸ்ட் ட்வீட்!

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த ஹாட் அப்டேட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஏகப்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் அடுத்த மாதம் ஒரு படத்தின் சவுண்ட் டிராக் வெளியாகப் போவதாக ட்வீட் போட ரசிகர்கள் எந்த படமாக இருக்கும் என ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு குழம்பித் தவித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் சவுண்ட் டிராக் தான் அடுத்த மாதம் வெளியாகிறதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் சர்ப்ரைஸ்

ஏ.ஆர். ரஹ்மான் சர்ப்ரைஸ்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் போட்டாலே அதில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் பொதுவாக அடங்கி இருக்கும். சர்ப்ரைஸ் என்றே ரசிகர்களுக்கு அவர் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. வரும் டிசம்பரில் ஒரு தமிழ் படத்தின் சவுண்ட் டிராக் வெளியாகப் போகிறது என ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ட்விஸ்ட்

ட்விஸ்ட்

ஏகப்பட்ட பெரிய படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படி எந்த படம் எனக் குறிப்பிடாமல் போட்ட ட்வீட் ரசிகர்களை ட்விஸ்ட் ஆக்கி உள்ளது. எந்த படம் அல்லது வேறு ஏதாவது க்ளூ கொடுங்க ரஹ்மான் சார் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஏகப்பட்ட படங்கள்

ஏகப்பட்ட படங்கள்

அயலான், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், இரவின் மடியில் என பல தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசைப்புயல். ஏகப்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்து வருவதால் தான் ரசிகர்கள் மத்தியில் எந்த படம் என தெரிந்து கொள்வதில் அப்படியொரு ஆர்வம் எழுந்துள்ளது.

பொன்னியின் செல்வனா

பொன்னியின் செல்வனா

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தான் வெளியாகப் போகிறது அடுத்த மாதம் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மெகா பட்ஜெட் படம் என்பதால் இப்போதே அந்த படத்திற்கான புரமோஷன் வேலைகளை ஆரம்பித்தாக வேண்டுமே என்றும் சரியான பாயின்ட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

எது கொடுத்தாலும் கெத்து தான்

எது கொடுத்தாலும் கெத்து தான்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் எந்த படத்தின் பாடல் மற்றும் இசை வெளியானாலும் அது கெத்து தான். பொன்னியின் செல்வனாக இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் சார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் அயலான் அல்லது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படங்களின் சவுண்ட் டிராக்காகவும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X