எஸ்.ஜே.சூர்யா ரொம்ப காலமாக நடித்து வந்த “இசை” நவம்பர் 21ல் வெளியீடு!

சென்னை: பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக ரொம்ப காலமாக நடித்து வந்த "இசை" திரைப்படமானது வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாலி, குஷி, நியூ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "இசை". சூர்யா படங்கள் ஆஹா ஓஹோவென ஓடியது ஒரு காலம்.

இப்படிப்பட்ட சூர்யா இடையில் தொய்ந்து போனார். இசை என்ற படத்தை நீண்ட காலமாக உருவாக்கி வந்தார். இப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு, இசையமைத்தும் இருக்கிறார்.

ஜோடியாக சாவித்ரி:

ஜோடியாக சாவித்ரி:

இதில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி என்ற கதாநாயகி நடித்திருக்கிறார்.

வில்லனாக சத்யராஜ்:

வில்லனாக சத்யராஜ்:

மேலும் இப்படத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர்களின் கதை:

இசையமைப்பாளர்களின் கதை:

இரண்டு இசையமைப்பாளர்களை பற்றிய கதையாக இசை படம் அமைந்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

ரசிகர்கள் ஆர்வம்:

ரசிகர்கள் ஆர்வம்:

இதை பார்த்த அனைவரும் படம் எப்போது வெளியாகும் என்று ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பின்னணி வேலைகளால் தாமதம்:

பின்னணி வேலைகளால் தாமதம்:

இப்படம் அக்டோபர் மாதமே ரிலீசாக இருந்தது. படத்தின் பின்னணி வேலைகள் அதிகமாக இருப்பதால் படம் ரிலீசாக தாமதமாகியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

நவம்பரில் ரிலீஸ்:

நவம்பரில் ரிலீஸ்:

தற்போது இப்படத்தின் பாடல்களை நவம்பர் 9 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும் படத்தை நவம்பர் 21 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வம்பு வராம இருந்தால் சரிதான்:

வம்பு வராம இருந்தால் சரிதான்:

இந்தப் படத்தின் கதை, இரு இசை மேதைகள் குறித்தது என்று ஏற்கனவே சரச்சையாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் படம் வந்து பிரச்சினையை வளர்க்காமல் இருந்தார் சரிதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X