அனிரூத் பாடிய “கண்ணம்மா“ பாடல்..50 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்ததுள்ளது

சென்னை : நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் சில்பா மஞ்சுநாத் நடித்து அனிரூத் பாடி கண்ணம்மா பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இயக்குனர் ரஞ்சித் ஜெயகோடி இயக்கத்தில் 2019ல் வெளிவந்த படம் தான் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் . இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து இருப்பார். இவர் இசையமைத்த பாடலான கண்ணம்மா பாடலை இசையமைப்பாளர் அனிரூத் பாடியிருப்பார். இந்த பாடல் 2019ன் பெரிய வெற்றி பாடல்களில் ஒன்றாகும் .

Ispade rajavum idhaya raniyum kannamma video song 50 million views

பல ரசிகர்கள் இந்த பாடலின் வரிகளையும் இசையையும் முனுமுனுக்காத நாளே இருக்காது என்று கூட சொல்லலாம். இந்த பாடலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது .

தற்போது கண்ணம்மா பாடல் 50மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது அஃதாவது 5கோடி பேர் இந்த பாடலை பார்த்திருக்கிறார்கள். திங்க் மியூசிக் நிறுவனம் தான் இந்த பாடலை யூடியூப்பில் வெளியிட்டு இருக்கிறது . 3லட்சத்திற்கும் அதிகமானோர் பாடலை யூடியூப்பில் லைக் செய்து இருக்கின்றனர். இந்த அளவு ஒரு நல்ல பாடலுக்கே கிடைக்கும் அங்கீகாரம் ஆகும் .

Ispade rajavum idhaya raniyum kannamma video song 50 million views

தற்போது இந்த நல்ல அங்கீகாரத்தை ரசிகர்கள் தந்திருப்பதால் ரசிகர்களுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்து இருக்கிறார் ஹரீஸ். இதில் ஹரீஸ் கூறும் போது, இந்த பெரிய வெற்றியை சாத்தியமாக்கிய இசை பிரியர்களுக்கு நன்றி என்றும் உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் வீடியோ வந்து கொண்டிருக்கிறது தயாராக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார் .

Ispade rajavum idhaya raniyum kannamma video song 50 million views

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போய் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த ஸ்பெஷல் வீடியோவிற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர். ரசிகர்களின் இந்த உற்சாகம் ஹரீஸையும் மகிழ்வித்து இருக்கிறது .

Ispade rajavum idhaya raniyum kannamma video song 50 million viewsIspade rajavum idhaya raniyum kannamma video song 50 million views

நடிகர் ஹரீஷ் கல்யாண் வளர்ந்து வரும் நாயகன் அவருக்கு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் மிக முக்கியமான படமாக அமைந்தது. அதிலும் முக்கியமாக கண்ணம்மா பாடல் பெரிய வெற்றி அடைந்ததன் மூலம் எளிதில் மக்கள் மனதில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் ஹரீஷ் கல்யாண்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X