ஜெய்பீம் ஒரிஜினல் சவுண்ட் டிராக் ரிலீஸ்.. ஷான் ரோல்டன் என்னம்மா மிரட்டி இருக்காரு!

சென்னை: சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படமும் ஆஸ்கர் கதவுகளை பலமாக தட்டியுள்ளது.

ஆஸ்கர் தனது யூடியூப் தளத்திலேயே சூர்யாவின் ஜெய்பீம் பட காட்சிகளை வெளியிட்டு ஜெய்பீம் படக்குழுவினருக்கு சிறப்பான மரியாதையை அண்மையில் செய்திருந்தது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஜெய்பீம் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை வெளியிட்டுள்ளார்.

உலகத் தரமான படைப்புகள்

உலகத் தரமான படைப்புகள்

நடிகர் சூர்யா தனது ரூட்டை முற்றிலுமாக மாற்றி உலகத் தரமான படங்களை தமிழ் சினிமாவே பெருமைப்படும் அளவுக்கு கொடுத்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான நிலையில், தற்போது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படமும் தற்போது ஆஸ்கர் போட்டிக்கு தகுதியான படம் என தேர்வாகி உள்ளது.

ஆஸ்கர் ரேசில் ஜெய்பீம்

ஆஸ்கர் ரேசில் ஜெய்பீம்

அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. காவல் நிலையங்களில் நடக்கும் கஸ்டடி கொலையை எதிர்த்து சாமானிய மக்களுக்காக வாதாடி நீதி வழங்கிய நீதியரசர் சந்துருவின் வாழ்க்கை மற்றும் அவர் சந்தித்த சிறப்பான வழக்கையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் போட்டிக்கு தகுதியானது என தேர்வாகி உள்ளது.

ஜெய்பீம் ஒஎஸ்டி ரிலீஸ்

ஜெய்பீம் ஒஎஸ்டி ரிலீஸ்

இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஜெய்பீம் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு வேற லெவல் இசை விருந்தை கொடுத்துள்ளார். உலகத் தரத்திலான பிஜிஎம் மற்றும் இசை ஜெய்பீம் படத்தில் பயன்படுத்தப்பட்டதை அறிந்து ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

விஐபி 2 பிரச்சனை

விஐபி 2 பிரச்சனை

நடிகர் தனுஷின் விஐபி 2 படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்த நிலையில், பாடல்கள் எதுவுமே சரியாக இல்லை என்றும் அனிருத் அளவுக்கு ஷான் ரோல்டனுக்கு மியூசிக் போட தெரியவில்லை என்றும் ரசிகர்கள் செய்த ட்ரோல்களுக்கு எல்லாம் ஜெய்பீம் படத்தின் இசை மூலம் பதிலடி கொடுத்துள்ளார் ஷான் ரோல்டன். விஐபி 2 படத்திற்கு இசையமைக்கவே வெறும் 3 நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் சமீபத்தில் ட்விட்டரில் வெளிப்படையாக உண்மையை போட்டு உடைத்தார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.

எதற்கும் துணிந்தவனுக்கு வெயிட்டிங்

எதற்கும் துணிந்தவனுக்கு வெயிட்டிங்

வரும் பிப்ரவரி 4ம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 30 ஆயிரம் கேஸ்களை நாள் தோறும் கொரோனா நெருங்கி வரும் நிலையில், மார்ச் மாதத்துக்கு அந்த படம் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் வலிமை உடன் மல்லுகட்டுமா எதற்கும் துணிந்தவன் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

வாடிவாசல் எப்போ

வாடிவாசல் எப்போ

சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களை தொடர்ந்து சூர்யாவுக்கு விருதுகளை கொடுக்க காத்திருக்கும் படம் என நம்பப்படும் வெற்றிமாறனின் வாடிவாசல் படம் எப்போது ஆரம்பிக்கும் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விரைவில் வெற்றிமாறனின் விடுதலை படம் வெளியாகவுள்ள நிலையில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X