ஜெயில் "மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா" லிரிக்ஸ் பாடல் வெளியானது!

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் ஜெயில்.

Recommended Video

Jail Movie Public Review | GV Prakash | Vasantha Balan | Filmibeat Tamil

வட சென்னையில் வாழும் பூர்வகுடி மக்களின் வலிகளைப் பற்றி முக்கியமாக இத்திரைப்படம் பேசியுள்ளது

எதிர்பார்த்தபடியே டிசம்பர் 9ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் ஜெயில் வெளியாகி பாராட்டுகளை பெற்று வரும் சூழலில் "மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா" பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

ஜெயில் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில்

ஜெயில் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில்

இசையில் பல சாதனைகள் புரிந்து தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராகவும் தனித்துவமான இசை அமைப்பாளராகவும் உள்ள ஜிவி பிரகாஷ் குமார் இப்பொழுது கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜிவி பிரகாஷ் குமார் இப்பொழுது கைநிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போது இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

வட சென்னை பூர்வகுடி மக்களின் வலிகளை

வட சென்னை பூர்வகுடி மக்களின் வலிகளை

இயக்குனர் வசந்தபாலன் திரைப்படங்கள் என்றாலே சர்ச்சைக்குப் பஞ்சமிருக்காது அதேபோல கதைகளும் மிக அழுத்தமானதாக இருக்கும். அந்த வகையில் ஜெயில் திரைப்படம் வட சென்னையில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வலிகளைப் பற்றியும் அவர்கள் இன்றளவும் சந்தித்து வரும் இன்னல்கள் போராட்டங்களைப் பற்றியும் இந்த திரைப்படம் ஆணித்தரமாக பேசி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாராக இருந்த ஜெயில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வெளியிட முடியாமல் போனது.

அனைவர் மத்தியிலும் பாராட்டுகள்

அனைவர் மத்தியிலும் பாராட்டுகள்

அந்த நிலையில் இன்று டிசம்பர் 9ஆம் தேதி தடைகள் அனைத்தையும் தகர்த்தெரிந்து ஜெயில் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது. ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் என அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வரும் ஜெயில் திரைப்படம் vada சென்னையில் வாழும் பூர்வகுடி மக்களை பற்றி இதுவரை யாரும் கூறாத கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா லிரிக்ஸ் வீடியோ

மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா லிரிக்ஸ் வீடியோ

மேலும் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் வடசென்னை பையனாக மிக தத்ரூபமாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் ஜிவி பிரகாஷின் அம்மாவாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயில் படத்தின் நகரோடி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்த பாடல் "மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா" லிரிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் கானா ஸ்டைலில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார். கானா பாலச்சந்தர், அறிவு மற்றும் இசைவாணி ஆகியோர் பாடியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X