ஜெயில் படத்தின் நகரோடி பாடல்... இன்று மாலை வெளியீடு!

சென்னை : நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில்.

இந்தப் படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். ஸ்டூடியோ க்ரீன் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் நகரோடி பாடலை இன்று மாலை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயில் படம்

ஜெயில் படம்

நடிகர் ஜிவி பிரகாஷ், அபர்ணிதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில். படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் ஸ்ரீதரன் மாரிதாசன் படத்தை தயாரித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலைவில் விரைவில் ரிலீசாக உள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் வெளியீடு

ஸ்டூடியோ க்ரீன் வெளியீடு

இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜிவி பிரகாஷின் முந்தைய படங்களான டார்லிங், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா உள்ளிட்ட படங்களை இந்த நிறுவனம் முன்னதாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 3வது படமாக இந்தப் படத்தை வெளியிடவுள்ளது.

ஞானவேல் ராஜா பாராட்டு

ஞானவேல் ராஜா பாராட்டு

ஸ்டூடியோ க்ரீன் உரிமையாளர் ஞானவேல் ராஜா படத்தை பார்த்துவிட்டு வெகுவாக புகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாடல் குறித்த அறிவிப்பு

பாடல் குறித்த அறிவிப்பு

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் விரைவில் படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளையும் படக்குழு முடுக்கி விட்டுள்ளது. விரைவில் படத்தின் ட்ரெயிலர் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நகரோடி பாடல்

நகரோடி பாடல்

நேற்றைய தினம் நகரோடி என்ற பாடலின் ப்ரமோவை வெளியிட்ட படக்குழுவினர் இன்று மாலை பாடல் வெளியாக உள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பாடலை இயக்குநர் பா ரஞ்சித் மற்றும் நடிகர் ஆர்யா வெளியிட உள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

தேர்ந்தெடுத்த நடிப்பு

தேர்ந்தெடுத்த நடிப்பு

முதலில் லவ்வர் பாயாக நடித்துவந்த ஜிவி பிரகாஷ் சமீபத்திய படங்களில் தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பினை வழங்கி வருகிறார். அந்தவகையில் இந்தப் படம் அவருடைய கேரியரில் மிகச்சிறந்த படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். வசந்தபாலன் இயக்கத்தில் அவருடைய நடிப்பு மேலும் மிளிரும் என்றும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X