Kadhalikka neramillai: பிரேக்கப்பிலும் அதிரடி.. வாவ் சொல்ல வைக்கும் காதலிக்க நேரமில்லை பாடல்!

சென்னை: ஜெயம் ரவி -நித்யா மேனன் கூட்டணியில் கிருத்திகா உதயநிதி டைரக்ஷனில் உருவாகியுள்ளது காதலிக்க நேரமில்லை படம். காதலும் காதல் நிமித்தமுமாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் கிருத்திகா. ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வரும் 14ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்,, ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வருகிறது, படத்தில் காதலை போலவே பிரேக்கப்பும் இருக்கும் நிலையில் அதற்கு தனியாக ஒரு பாடலை அமைத்துள்ளார் இசைப்புயல்.

jayam ravi nithya menon kadhalikka neramillai movie

காதலிக்க நேரமில்லை படம்: நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த படங்கள் சொதப்பிவரும் நிலையில் அடுத்ததாக கிருத்திகா உதயநிதி டைரக்ஷனில் அவர் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தை அதிகமாக எதிர்பார்த்துள்ளார். நித்யா மேனனுடன் இந்தப் படத்தில் ஜெயம் ரவி இணைந்துள்ளார். முன்னதாக தனுஷுடன் நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் படத்தில் மாஸ் காட்டியிருந்த நிலையில் அடுத்ததாக அவருடனேயே நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயம் ரவிக்கு அதிகமான டஃப்பை அவர் காதலிக்க நேரமில்லை படத்திலும் கொடுத்துள்ளதாக தெரிகிறது. படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வைபை ரசிகர்களிடையே கொடுத்துள்ளது.

பிரேக்கப் டா பாடல்: இந்நிலையில் தற்போது பிரேக்கப் டா பாடல் வெளியாகியுள்ளது. ஸ்நேகன் இந்தப் பாடலின் வரிகளை எழுதியுள்ள நிலையில் ஸ்ருதிஹாசன் மற்றும் ஆதித்யா ஆர்கே இணைந்து பாடியுள்ளனர். பிரேக்கப் என்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம் பூமர் வேலை என்பதை தற்பேதைய தலைமுறையினர் மனநிலையில் இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது. உன் கொலவெறி இனிமே வேண்டாம், என் முகவரி இனிமே நான்தான் என்று இந்தப் பாடலில் அதிரடியாக உரக்க சொல்கிறார் நித்யா மேனன். அதற்கு ஜெயம் ரவியும் தக்க பதிலடி கொடுப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

பொங்கல் கொண்டாட்டம்: அடுத்தடுத்து இழு இழு இழுக்குதடி மற்றும் லாவண்டர் நிறமே பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய புத்தாண்டு கொண்டாட்டத்தை ரசிகர்களுக்க கொடுத்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள நிலையில், பிரேக்கப் பாடலாக இருந்தாலும் இந்தப் பாடலும் ரசிகர்களை கொண்டாடவே செய்துள்ளது. முன்னதாக வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களை வெப் தொடர்களை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதிக்கு இந்தப் படமும் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள இந்தப் படம் சிறப்பான பொங்கல் கொண்டாட்டத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ரொமாண்டிக் ஜானரில் ஜெயம் ரவி: ஜெயம் ரவியின் அடுத்தடுத்த இறைவன், சைரன், பிரதர் படங்கள் சொதப்பலாக அமைந்த நிலையில் அவருக்கு எப்போதுமே கைக்கொடுக்கும் ரொமாண்டிக் ஜானரில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கலாம். ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள நிலையில், படத்தின் வெற்றிக்கு இந்தப் பாடல்களும் முக்கிய காரணங்களாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X