twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீர மரணமடைந்த காவலர்களுக்கு...ஜிப்ரான் இசையில் வீரவணக்கம்

    |

    சென்னை: கொரோனா சமயத்தில் வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜிப்ரான் இசையில் 'வீரவணக்கம் அந்தம்' வெளியீடு

    காவல்துறை உங்கள் நண்பன் என்பது தமிழ்நாடு காவல் துறையின் தாரக மந்திரம். இது வார்த்தையாக மட்டும் நின்றுவிடாமல் செயல் வடிவமாக கொரோனா சமயத்தில் வெளிப்படுத்தியவர்கள் நம்முடைய காவல் துறையினர்.

    கொரோனா சமயத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாடு காவல் துறையினர் இரவும் பகலும் மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்து சேவை செய்து வந்தனர். கொரோனா கோரப் பிடியில் பல காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் பலியானார்கள்.

    அக்ஷராவ உன்கிட்டேருந்து பிரிக்க 2 நிமிஷம் ஆகாது... மொத்த திமிரையும் காட்டும் அபிஷேக்.. புதிய புரமோ! அக்ஷராவ உன்கிட்டேருந்து பிரிக்க 2 நிமிஷம் ஆகாது... மொத்த திமிரையும் காட்டும் அபிஷேக்.. புதிய புரமோ!

    போலீஸ் வாரியர்ஸை

    போலீஸ் வாரியர்ஸை

    அவர்களுடைய தன்னலமற்ற தியாகத்தை நினைவுக்கூறும் வகையில் தற்போது 'வீர வணக்கம் அந்தம்' என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்த போலீஸ் வாரியர்ஸை கெளரவிக்கும் விதமாக இந்த ஆல்பத்தை உருவாக்கியவர் திருவள்ளுர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஐ,பி.எஸ்.

    தேசத்துக்காக

    தேசத்துக்காக

    இந்த ஆல்பத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'தேசத்துக்காக' என்ற இந்தப் பாடலை 'செவ்வந்தியே மதுவந்தியே' புகழ் மாற்றுத்திறனாளி திருமூர்த்தியும், தலைமை காவலர் சசிகலாவும் இணைந்து பாடியுள்ளனர்.ஒளிப்பதிவை FIVETH ANGLE STUDIOS நிறுவனம் செய்துள்ளது.

    ஸ்டாலின் வலைப் பக்கத்தில் பதிவிட்டு

    ஸ்டாலின் வலைப் பக்கத்தில் பதிவிட்டு

    இந்த ஆல்பம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் சமீபத்தில் இந்த ஆல்பத்தை உருவாக்கிய வருண்குமார் ஐ.பி.எஸ். மற்றும் அவருடைய குழுவினரை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய சமூக வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.கொரோனா சமயத்தில் பொதுமக்களுக்காக காவல் துறையினர் அர்ப்பணித்த காட்சிகள் நெகிழவைக்கும் விதத்தில் அமைந்துள்ளன. இந்த ஆல்பத்தை பார்க்கும்போது நம்மையும் அறியாமல் காவல்துறைக்கு ராயல் சல்யூட் அடிக்கத் தோன்றும்.

    மனதளவில் ஒரு தாக்கத்தை

    மனதளவில் ஒரு தாக்கத்தை

    தொழில் நுட்ப கலைஞர்கள் என்று இந்த படைப்புக்கு மிக பெரிய குழு மிக பெரிய மெனக்கெடுதலை கொடுத்து உள்ளனர் . ஆக்கம்: வருண்குமார் ஐ. பி. எஸ் ,இசை : ஜிப்ரான், ஒளிப்பதிவு : மனோஜ் நாகராஜன் (Fifth Angle Studios), பாடகர்கள் : திருமூர்த்தி மற்றும் சசிகலா (தலைமை காவலர்). பல குடும்பங்களில் பலவிதமான சோகமான நிகழ்வுகள் 2020 மற்றும் 2021 காலங்களில் அதிகம் நடந்தது . மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் செவிலியர்களும் மிகவும் கடினமாக உழைத்தார்கள் . அவர்களை நினைவு கூறும் விதமாக இப்படி ஒரு பாடல் அமைந்தது அவர்களை சேர்ந்த குடும்பத்தாருக்கும் மற்றும் கடமையாற்றி வரும் பலருக்கும் மனதளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பாடலாக இந்த வீரவணக்கம் அந்தம் இருக்கிறது.

    English summary
    Jibran Music Tribute to Heroic Policemen Who have Died
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X