முதல் நாள் 'வீரம்', மறுநாள் 'ஜில்லா' இசை வெளியீடு
சென்னை: விஜய்யின் ஜில்லா படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.
பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் என்று 2 படங்கள் ரிலீஸாகின்றன. பொங்கல் போட்டியில் இருந்த கோச்சடையான் இறுதி நேரத்தில் பின் வாங்கியது. இதையடுத்து கோச்சடையான் தனியாக ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஜில்லா படத்தின் இசையமைப்பாளர் இமான் இசை வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

21ம் தேதி
டிசம்பர் 21ம் தேதி ஜில்லா படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடக்கிறது என்று இமான் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

20ம் தேதி
ஜில்லா இசை வெளியீட்டுக்கு முந்தைய நாள் தான் அஜீத்தின் வீரம் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வினியோகஸ்தர்கள்
கர்நாடக மாநில வினியோகஸ்தர்கள் ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்களை குறைந்த விலைக்கு கேட்கிறார்களாம். ஆனால் அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்கு தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கண்டாங்கி
ஜில்லா படத்தில் விஜய் ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











