2021ல் jio saavn ல் முதல் 5 இடத்தை பிடித்த தமிழ் பாடல்கள்!
சென்னை : jio saavn ஒவ்வொரு ஆண்டும் தமிழில் வெளியாகும் பாடல்களை வரிசை படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டும் பல வெற்றி பாடல்கள் jio saavn ல் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில் 2021 jio saavn ல் முதல் 5 இடத்தை பிடித்த தமிழ் பாடல்களின் லிஸ்ட் இதோ.

குட்டி பட்டாஸ்
jio saavn லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ள பாடல் குட்டி பட்டாஸ். வளர்ந்து வரும் இளம் நடிகர் அஸ்வின் குமார் நடிப்பில் சந்தோஷ் தயாநிதி இசையில் சாண்டி மாஸ்டர் கோரியோகிராஃபியில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் உருவான இந்த பாடல் முற்றிலும் திருவிழா செட்டப்பில் எடுக்கப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. இணையதளத்தில் செம வைரலான இந்த பாடல் இளம் தலைமுறையினரை அதிகமாக கவர்ந்து ஆட்டம் போட வைத்தது. 2021 jio saavn ல் இந்த பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது

பேர் வச்சாலும்
தொடர்ந்து காமெடி படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான டிக்கிலோனா படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் பேர் வச்சாலும். இசைஞானி இளையராஜாவின் இசையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த பாடல் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தில் மிகப்பெரிய ட்ரெண்டிங்கில் இருந்த இந்த பாடல் 2021 jio saavn லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது

மாஸ்டர் தி பிளாஸ்டர்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் வெளியான மாஸ்டர் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதில் விஜய்யின் ஜே.டி கதாபாத்திரத்திற்கு என்றே உருவாக்கப்பட்ட மாஸ்டர் தி பிளாஸ்டர் பாடல் 2021 jio saavn ல் டாப் மூன்றாம் இடத்தில் உள்ளது

சோ பேபி
நடிகர் சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் சோ பேபி. சிவகார்த்திகேயனின் வரிகளில் அனிருத்தின் இசையில் உருவான இந்த ரொமான்டிக் பாடல் 2021 jio saavn ல் டாப் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.

டு டு டு
நானும் ரவுடிதான் வெற்றிக்குப் பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணி இணைந்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சமந்தா இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள டு டு டு பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. விக்னேஷ் சிவனின் வரிகளில் கேட்பதற்கு மிகவும் புத்துணர்ச்சியாக அனைவரையும் கவர்ந்த இந்த பாடல் 2021 jio saavn ல் டாப் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











