சம்மருக்கு ஜாலியா சரக்கு அடிக்கிறோம்னு நினைக்கிறீங்களா?.. ஜொனிதா காந்தி வெளியிட்ட வீடியோ!
சென்னை: பிரபல பின்னணி பாடகி ஜொனிதா காந்தி நீச்சல் குளத்தில் இருந்து வெளியிட்ட Expectation vs Reality வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அடிக்கடி கவர்ச்சி காட்டி ரசிகர்களை தனது ஃபாலோயர்களாக மாற்றி வருகிறார் ஜொனிதா காந்தி.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹை வே, கோச்சடையான் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களைப் பாடத் தொடங்கிய ஜெனிதா காந்தி ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். சூர்யா நடித்த 24 படத்தில் இடம்பெற்ற "மெய் நிகரா" பாடலையும் இவர்தான் பாடினார்.

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த வேலைக்காரன் படத்தில் இடம் பெற்ற "இறைவா" பாடலைப் பாடி அசத்திய ஜொனிதா காந்தி கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜவான் எனத் தொடர்ந்து அனிருத் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
பின்னணி பாடகி ஜொனிதா காந்தி: ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ஓகே கண்மணி, 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, சர்க்கார், 99 சாங்ஸ் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை ஜொனிதா காந்தி பாடியுள்ளார். இசைப் புயலைத் தொடர்ந்து அனிருத் இசையிலும் இவர் பாடி வருகிறார். ஒரே நேரத்தில் ஒன்பது மொழிகளில் பாடக்கூடிய பக்காவான டேலன்ட் கொண்டவர் ஜொனிதா காந்தி.
ஏகப்பட்ட கிசுகிசு: டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா செல்லம்மா பாடலை அனிருத் உடன் இணைந்து ஜொனிதா பாடி நடனமாடிய நிலையில், அடுத்ததாக பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடலிலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பாடி நடனம் ஆடினார்கள். லிரிக் வீடியோவை இவர்களுக்கான ஆல்பம் வீடியோவாக மாறிய நிலையில் இருவரும் காதலித்து வருகிறார்களா என்ற கிசுகிசுக்கள் கிளம்பின.
சட்டையை கழட்டி: ஒரே ஒரு வெள்ளை சட்டையை அணிந்து கொண்டு பிளாக் அண்ட் ஒயிட் தீமில் பாடல் பாடிய வீடியோவையும் கவர்ச்சியாக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களையும் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொனிதா காந்தி வெளியிட்டு இணைய வாசிகளை வசீகரித்து இருந்தார். இந்நிலையில், அடுத்த கட்ட போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நீச்சல் குளத்தில் கையில் சரக்குடன்: தொடர்ந்து சூடான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் ஜொனிதா காந்தி தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் தனது தோழியுடன் கையில் சரக்கடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதுதான் Expectation ஆனால், ரியாலிட்டி என்னவென்றால் அங்கேயும் வெயில் அடிக்கிறது என தலையில் துண்டு போட்டுக் கொண்டு தான் போகிறோம் என வீடியோ வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











