எத்தனை கட்டில வாங்கனும் சொல்லுடா.. அனிருத் இசை.. ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் செம குத்தாட்டம்!
ஹைதராபாத்: இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்துள்ள தேவரா படத்தின் தாவூதி பாடல் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது.
தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்த ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அடுத்ததாக தென்னிந்தியாவை நோக்கி படையெடுத்து வந்திருக்கிறார்.

ஜூனியர் என்டிஆரின் தேவரா மற்றும் ராம்சரணின் புதிய படத்திலும் ஜான்வி கபூர் தான் ஹீரோயின். தமிழ் சினிமாவிலும் சீக்கிரமே இவர் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாராள கவர்ச்சி: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அம்மா மறைந்த பின்னர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இந்தியில் வரிசையாக பல படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லையற்ற கவர்ச்சியை காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாலிவுட் ரசிகர்களையும் தாண்டி இந்தியளவில் அனைத்து ரசிகர்களும் ஜான்வி கபூரை ரசித்து வருகின்றனர்.
அனிருத் இசையில்: தமிழ் சினிமாவை தொடர்ந்து ராக் ஸ்டார் அனிருத் தெலுங்கிலும் தனது இசை ஆற்றலை போட்டுத் தாக்க புறப்பட்டு சென்ற நிலையில், கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர் நடித்து வரும் தேவரா படத்துக்கு பாடல்களை போட்டுள்ளார். ஏற்கனவே வெளியான சுட்டாமல்லி பாடலும் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், தற்போது தாவூதி என்கிற பாடலை அரபிக் குத்து பாடல் ஸ்டைலில் போட்டு அசத்தியுள்ளார்.
ஜான்வி குத்தாட்டம்: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நாட்டுக் கூத்து பாடலுக்கு நடனமாடிய ஜூனியர் என்டிஆருக்கு இணையாக நடிகை ஜான்வி கபூர் கவர்ச்சி பொங்க குத்தாட்டம் போட்டுள்ள முழு பாடல் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
எப்படிப்பட்ட வரிகள்: குளத்து மீனை குழம்பு மீனா ஆக்கட்டுமா என ஆரம்பிக்கும் தேவரா பாடல் வரிகளில் எத்தனை கட்டில வாங்கணும் சொல்லுடா என்கிற ரேஞ்சுக்கு ஜான்வி கபூர் இறங்கி குத்தாட்டம் போட்டு டோலிவுட் ரசிகர்களை மட்டுமின்றி இந்திய ரசிகர்களையே ஜொள்ளு விட வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். பாடலில் இடம்பெற்றுள்ள தமிழ் லிரிக்ஸை கேட்கும் ரசிகர்கள் எப்படிப்பட்ட வரிகள் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











