ஜெயப்பிரதாவின் 'உயிரே உயிரே' ... ஆடியோவை வெளியிடுகிறார் அமர்சிங்!
சென்னை: 2012 ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த படம் இஷ்க், யாவரும் நலம் விக்ரம் குமார் இஷ்க் படத்தை தெலுங்கில் இயக்கி இருந்தார். இதன் ரீமேக் உரிமையை முன்னால் நடிகையும், அரசியல்வாதியுமான நடிகை ஜெயப்பிரதா வாங்கி இருந்தார்.
தனது மகன் சித்துவை கதாநாயகனாக அறிமுகம் செய்ய இஷ்க் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய நடிகை ஜெயப்பிரதா, சத்யம் படத்தின் இயக்குநர் ராஜ்குமாரை தேர்ந்தெடுத்து இந்தப் படத்தை தமிழில் இயக்கச் சொன்னார்.
படத்தில் சித்துவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து பாதிப் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், என்ன காரணத்தினாலோ படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர்.
தற்பொழுது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் ஜூன் 27 அன்று நடைபெறுகிறது, இதில் படத்தின் தயாரிப்பாளரும் பிரபல அரசியல்வாதியுமான அமர்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

2 ஆண்டுகளுக்கும் மேலாக
2013 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 2 வருடங்களுக்கும் மேலாகவே நடந்து ஒருவழியாக தற்போதுதான் முடிவடைந்து உள்ளது.

முதலில் நித்யா அப்புறம் ஹன்சிகா
உயிரே உயிரே படத்தில் முதலில் நடிக்க இருந்த நித்யாமேனன் திடீரென்று விலகிக்கொள்ள, பின்பு ஹன்சிகாவை நாயகியாக்கி படத்தை எடுத்தது படக்குழு.

சித்துவை காதலிக்கிறார் ஹன்சிகா
படப்பிடிப்பின் போது நடிகர் சித்துவும் நடிகை ஹன்சிகாவும் காதலிக்கிறார்கள் என்று கிளம்பிய வதந்தியால், கொஞ்ச நாட்கள் கோடம்பாக்கமே பற்றி எரிந்தது.

ஜெயப்பிரதாவுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கும் அமர்சிங்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முக்கிய அரசியல்வாதியான அமர்சிங் நடிகை ஜெயப்பிரதாவுடன் இணைந்து உயிரே உயிரே படத்தைத் தயாரித்துள்ளார்.

ஆடியோ விழாவின் சிறப்பு விருந்தினர் அமர்சிங்
வரும் ஜூன் 27 ம் தேதியன்று உயிரே உயிரே படத்தின் ஆடியோ வெளியீடானது நடைபெற உள்ளது. இதில் அனில்கபூர், மோகன்பாபு, அம்பரீஷ் போன்ற நடிகர்களுடன் அமர்சிங்கும் கலந்து கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











