கஞ்சன் விஜய் சேதுபதி, மயங்கி விழுந்த ஹீரோயின்: ஜுங்கா சுவாரஸ்யங்கள் #Junga

By Siva

Recommended Video

வேட்டி சட்டையில் இசை வெளியீட்டிற்கு வந்த ஜுங்கா படக்குழுவினர்- வீடியோ

சென்னை: ஜுங்கா படப்பிடிப்பின்போது நடிகை சயீஷா மயங்கி விழுந்துள்ளார்.

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜுங்கா. படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன.

ஜுங்கா இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

வேட்டி

வேட்டி

ஜுங்கா படக்குழு ஆண்கள் பச்சை நிற வேட்டியும், ஊதா கலரு சட்டையும் அணிந்து வந்திருந்தனர். மேடையில் சோபா, சேர் எல்லாம் இல்லை பெஞ்ச் போட்டிருந்தனர்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி சரியான கஞ்சப்பய டானாக நடித்துள்ளார். படத்தில் தான் கஞ்சமே தவிர படத்தின் தயாரிப்பாளராக தாராளமாக இருந்துள்ளார் மக்கள் செல்வன். கஞ்ச டான் என்பதால் மேடையில் பெஞ்ச் போட்டுள்ளனர் போன்று.

மயக்கம்

மயக்கம்

மைனஸ் 9 டிகிரியில் படப்பிடிப்பு நடத்தியபோது குளிர் தாங்க முடியாமல் சயீஷா மயங்கிவிட்டார். உடனே அவரை காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். எனக்கோ ஷூட்டிங் பாதிக்கிறதே என்ற வருத்தம். கொஞ்ச தூரம் சென்ற கார் உடனே திரும்பி வந்தது. காரில் இருந்து இறங்கி வந்த சயீஷா கொஞ்ச நேரம் ஹீட்டர் அருகில் நின்றுவிட்டு வந்து நடிக்கிறேன். இந்த காட்சி பாதிக்கப்படக் கூடாது என்றார். அவரின் அர்ப்பணிப்பை பார்த்து மகிழ்ந்தேன் என்று கோகுல் தெரிவித்துள்ளார்.

அருண் பாண்டியன்

அருண் பாண்டியன்

ஜுங்கா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண் பாண்டியன் பேசியபோது, என் 35 வருட சினிமா வாழ்க்கையில் விஜய் சேதுபதி போன்று யாரையும் பார்த்தது இல்லை. அவர் படத்தில் தான் கஞ்ச டான், ஆனால் பட்ஜெட் பெரிது என்றார்.

நாசர்

நாசர்

10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் சேதுபதி மதுரையில் மேடை நாடகம் ஒன்றில் ராஜாவாக நடித்தபோது அவரை முதன்முதலாக பார்த்தேன். தற்போது அவர் கோலிவுட்டின் சின்ன கிங்காகிவிட்டார். இதை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது என்று நாசர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X