twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலா ஆடியோ.. குவிந்த ரசிகர்கள்.. கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீஸ்.. கெஞ்சிய டிடி!

    காலா ஆடியோ வெளியீட்டு விழாவில் தாறுமாறாக ரசிகர்கள் குவிந்துள்ளதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

    By Lakshmi Priya
    |

    சென்னை: காலா ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

    பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது காலா திரைப்படம். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

    Kaala audio launch function: Police could not able to control the fans

    இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்களை வெளியாகிறது. இந்த பாடல்களில் உரிமை, புரட்சி என்பது குறித்து வருவதால் அமைதிக்கு குந்தகம் விளைவித்துவிடுமோ என்ற அச்சத்தில் ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Kaala audio launch function: Police could not able to control the fans

    இந்நிலையில் காலா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா என்றதும் காலை முதலே ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்த விழாவை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கி வருகிறார். விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளும் அழைக்கப்பட்டனர்.

    இந்த விழாவில் 3 நிறத்திலான பாஸ்கள் வழங்கப்பட்டன. அவரவர்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்கள் வழியே சென்று நிகழ்ச்சியை காணும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் ரஜினியை பார்த்து விடவேண்டும் என்பதால் ரசிகர்கள் விஐபி வழிகள் வழியாக உள்ளே வந்துவிட்டனர்.

    Kaala audio launch function: Police could not able to control the fans

    பெரும்பாலான ரசிகர்கள் காலா படத்தின் கெட் அப்பான கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து கொண்டு வந்திருந்தனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமுடியாமல் ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு திவ்ய தர்ஷினி கேட்டுக் கொண்டுள்ளார்.

    போலீஸாரும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். நிகழ்ச்சியின் முடிவில் ரஜினி பேசும்போது அரசியல் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Kaala audio launch function: Police could not able to control the fans. Fans get in to the venue in all the gates.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X