'காலா' இசை வெளியீட்டு விழா எங்கே நடக்குதுனு தெரியுமா?

By Vignesh Selvaraj

Recommended Video

'காலா' இசை...மே 9 முதல்..!- வீடியோ

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படத்தின் பாடல்கள் வரும் மே 9-ம் தேதி வெளியிடப்பட இருக்கின்றன. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 27-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்ட்ரைக் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. அதனால், இசை வெளியீட்டையும் மே 9-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். படம் ஜூன் 7-ம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

kaala audio release function in chennai

'காலா' இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப் ஆகிய சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படத்தின் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள். இதற்காக, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினி நேற்று இரவே சென்னை திரும்பியிருக்கிறார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தனது அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சி தொடக்கத்தை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பதாக ரஜினி மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கும், பாஜக ஆதரவு நிலை எடுப்பார் எனக் கூறப்பட்டு வருவது குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X