'காலா' பாடல்கள் வெளியானது.. யூ-ட்யூபில் ட்ரெண்ட் ஆகும் jukebox!
Recommended Video

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'காலா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ Jukebox யூ-ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது. எட்டு பாடல்கள் + ஒரு பாடலின் Acapella வெர்சன் ஆகியவை இந்த டிராக்கில் இடம்பெற்றுள்ளன.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. எந்த எல்லையும் வகுத்துக் கொள்ளாமல் இசையமைப்பில் விளாசியிருக்கிறார் சந்தோஷ்.
டிராக்கில் இடம்பெற்றுள்ள பாடல்கள்,
1. செம்ம வெய்ட்டு
2. தங்க செல
3. கற்றவை பற்றவை
4. கண்ணம்மா
5. கண்ணம்மா Acapella version
6. உரிமையை மீட்போம்
7. போராடுவோம்
8. தெருவிளக்கு வெளிச்சத்துல
9. நிக்கல் நிக்கல்
பாடலைக் கேட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாடல்களை விமர்சித்து வருகின்றனர். பலரும் சந்தோஷ் நாராயணின் இசையைப் பாராட்டியுள்ளனர். வெவ்வேறு வித்தியாசமான பாணிகளில் உருவாகியிருக்கும் 'காலா' பாடல்களை ரசித்து எப்படி இருக்கிறது என கமென்ட் செய்யலாம்..


Click it and Unblock the Notifications











