திடுமென்று மார்க்கெட்டில் குதித்த கடல் ஆடியோ !
டிசம்பர் 17-ம் தேதி விற்பனைக்கு வருவதாக இருந்த கடல் படத்தின் இசையை, இரு தினங்களுக்கு முன்பே திடுமென்று மார்க்கெட்டில் இறக்கிவிட்டுள்ளார் இயக்ககுநர் மணிரத்னம்.
கார்த்தி மகன் கவுதம், ராதா மகள் துளசி நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள கடல் பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளன.
ஏற்கெனவே ஏலே கீச்சான், நெஞ்சுக்குள்ளே ஆகிய இரு பாடல்கள் வெளியாகியுள்ளன. மொத்த பாடல்களையும் வரும் 17-ம் தேதி வெளியிடப் போவதாக சொல்லியிருந்தார் மணிரத்னம்.
இந்த ஆல்பத்தில் மேற்கண்ட இரு பாடல்களைத் தவிர, சித்திரை நிலா, அடியே, மூங்கில் தோட்டம், அன்பின் வாசலே ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
மெட்ராஸ் டாக்கீஸ், ஜெமினி பிலிம்ஸ் தயாரித்துள்ள கடல் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications












