வெளங்கிடும்.. காத்திருந்த ரசிகர்களை கடுப்பாக்கிய கல்கி 2898 ஏடி படக்குழு.. ஆந்தம் அவ்ளோதானா?
சென்னை: பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் இந்த மாதம் ஜூலை 27-ஆம் தேதி வெளியாகிறது.
சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள கல்கி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இரவு 8:00 மணிக்கு வெளியாகும் என்றனர்.

கல்கி ஆந்தம் எனும் பெயரில் உருவாகியுள்ள அந்த பாடல் கடைசியாக நாளை தான் முழு வீடியோவும் வெளியாக என தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்து ரசிகர்களை அப்செட் டாக்கி உள்ளது.
புராண புனைவு: மகாபாரத போருக்கு பிறகு அடுத்த யுகமாக தொடங்கும் கலியுகத்தில் கல்கி அவதாரத்தில் விஷ்ணு பகவான் அவதரித்து மக்களை காப்பாற்றுவார் என்கிற புராணக் கதையுடன் புனைவு கதையாக இந்த கல்கி 2898 ஏடி படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். மகாபாரதத்தில் இருந்து அஸ்வத்தாமா கதாபாத்திரத்தை கொண்டு வந்து அதில் அமிதாப்பச்சனை நடிக்க வைத்துள்ளார். கலி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பைரவா கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

பைரவா ஆந்தம்: பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பைரவா ஆந்தம் பாடல் வீடியோ இன்று வெளியாகும் என்றும் பிரபாஸ் மற்றும் தில்ஜித் தோஷங் இணைந்து பாடி நடனமாடிய வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இரவு 8:00 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அந்த பாடல் தற்போது நாளை காலை 11:00 மணிக்கு முழு வீடியோ பாடலாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.

கடுப்பான ரசிகர்கள்: கடைசியாக கல்கி படத்தையும் இன்று வெளியாகாது நாளை அல்லது ஒரு மாதம் கழித்து வெளியாகும் என தயவுசெய்து அறிவித்து விடாதீர்கள் எதையுமே பிளான் செய்து பக்காவாக வெளியிடவில்லை என கடுப்படித்து வருகின்றனர். ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என தற்போது பாடல் ஆடியோ வடிவில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆனால், பிரபாஸ் தரிசனத்துக்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்டு தரமா இருக்கு: அனிமல் படத்தின் எஃபெக்ட் காரணமாக அதே மாதிரியான டைப் பாடலாக உருவாகி உள்ளது. தில்ஜித் தோஷங் குரலில் பாடல் தாறுமாறாக தெறிக்கிறது. தமிழ் மற்றும் பஞ்சாபி மொழி என கலந்து இந்த பைரவா ஆந்தம் உருவாகியிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை தரமாக உள்ளது.


Click it and Unblock the Notifications