பேஸ்புக் பின்னணியில் கல்யாண சமையல் சாதம் பாட்டு!

By Shankar

பிரசன்னா - லேகா வாஷிங்டன் நடித்துள்ள கல்யாண சமையல் சாதம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது.

படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை பேஸ்புக் பின்னணியில் வித்தியாசமாக அமைத்துள்ளனர். ஒவ்வொரு நிகழ்வுக்கும் பேஸ்புக்கில் கமெண்டாக விழுவது போல அந்தப் பாடல் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் டிசைன்களைப் பார்த்தால் ஏதோ மயிலாப்பூர் சித்திரைக்குளம் பார்ட்டிகளின் வழக்கமான கச்சேரி மாதிரி தெரிந்தாலும், படத்தில் கிளுகிளு சமாச்சாரங்கள் நிறையவே இருக்கும் என்றார்கள்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் பாலு மகேந்திரா, "இந்தப் படத்தில் நான் வெஜ் ட்விஸ்ட் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆணும் வாழ்க்கையில் அதை ஒருமுறையாவது செய்யாமல் இருந்திருக்க மாட்டான்," என்றார்.

விழாவில் ஏகப்பட்ட விருந்தினர்கள். ஒரு பாட்டும் ட்ரைலரும் முடிந்த உடனே, வரிசையாக மைக்கப் பிடித்தவர்கள் பேசித் தள்ளிவிட்டார்கள்.

Kalyana Samayal Sadham audio launched

இந்தப் படத்தை அட்டகத்தி தயாரிப்பாளர் சிவி குமார் வெளியிடுகிறார். இன்று விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேரும் சொல்லி வைத்த மாதிரி சிவி குமாரை புகழ்ந்து தள்ளினார்கள். ஏனோ ஒரு கணம் பிரமிட் சாய்மிரா சாமிநாதன் நினைவுக்கு வந்து போனார்!

விழா முடிவில் பேசிய பிரசன்னா, எல்லோரையும் ஜோக் என்ற பெயரில் கலாய்த்துக் கொண்டிருந்த பாலாஜியை வாரினார். "பாலாஜி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பெரிய சம்பளம் வாங்கியிருக்கே. இந்தப் படத்துக்கு உங்க ரேடியோல நல்ல விமர்சனம் தரணும். காசு பத்தலண்ணா இன்னும் கூட தயாரிப்பாளர் கிட்டேயிருந்து வாங்கிக்க", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X