பந்தலுக்கு ஈசானமூலை.. தக் லைஃப் படத்தில் பாடப்போகும் கமல்ஹாசன்.. வெளியான சூப்பர் வீடியோ!

சென்னை: மணிரத்தினம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதன் அட்டகாசமான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்கு சென்று ஏஐ படித்துவிட்டு கமல்ஹாசன் வந்த நிலையில், விறுவிறுப்பாக தக் லைஃப் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan sing a song for Thug Life promo out now

ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோவில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் வந்து முதல் சிங்கிளுக்கான பாடல் பாடும் காட்சிகளை தற்போது ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதலில் ஷங்கருடன்: கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. விஸ்வரூபம் படத்திற்கு பிறகு வசூல் வேட்டை நடத்திய படமாக விக்ரம் மாறியது. அந்த படத்திற்கு பிறகு இளம் இயக்குனர்களுடன் கமல்ஹாசன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய நண்பர்களுடன் மீண்டும் அவர் கைகோர்த்து வருகிறார். முதலில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்தியன் 3 திரைப்படம் வெளியாகுமா என்பதே சந்தேகமாக உள்ளது. ஷங்கரை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

தக் லைஃப்: பொன்னியின் செல்வன் எனும் கனவு காவியத்தை இரண்டு பாகங்களாக இயக்கிய மணிரத்தினம் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் உடன் இணைந்து உருவாக்கி வரும் படம் தான் தக் லைஃப். இந்த படத்தில் சிம்பு, அசோக் செல்வன், அபிராமி மற்றும் த்ரிஷா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக இருவரும் விலகி விட்டனர்.

விண்வெளி நாயகா: தக் லைஃப் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் க்ளிம்ஸ் வீடியோவில் இடம்பெற்ற விண்வெளி நாயகா என்கிற வார்த்தையை மையப்படுத்தி முதல் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது "பந்தலுக்கு ஈசான மூலை" என்கிற வரிகளை கமலஹாசன் பாடும் பாடல் உருவாகி வருகிறது. விரைவில் அந்த பாடல் வெளியாகும் என்கிற அறிவிப்புடன் ப்ரோமோ வீடியோவை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜூன் மாத சம்பவம்: இந்த ஆண்டு முன்னணி நடிகர்கள் நடித்துள்ள பல பெரிய படங்கள் வரிசைக் கட்டி வெளியாக காத்திருக்கின்றன. அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. சூர்யாவின் ரெட்ரோ மே 1ம் தேதி வெளியாகிறது. அதன் பின்னர், பெரிய படமாக தக் லைஃப் ஜூன் மாதத்தில் சம்பவம் செய்ய காத்திருக்கிறது. ஆகஸ்ட் 14ம் தேதி ரஜினிகாந்தின் கூலி படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

FAQs
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த முதல் படம் எது?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த முதல் படம் நாயகன் (1987).

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X