மதுரையில் விஸ்வரூபம் இசை வெளியீடு.. முதல் சிடியை மாற்றுத் திறனாளி ரசிகருக்கு வழங்கிய கமல்!
மதுரை: விஸ்வரூபம் படத்தின் இசை இன்று மதுரையில் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் இசை குறுந்தட்டை மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவருக்கு வழங்கி கவுரவப்படுத்தினார் கமல் ஹாஸன்.
விஸ்வரூபம் படத்தின் இசையை இன்று ஒரே நாளில் மதுரை, கோவை மற்றும் சென்னையில் வெளியிடுவதாக அறிவித்திருந்தார் கமல்.
அதன்படி முதலில் மதுரையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தினார். வேலம்மாள் பள்ளி மைதானத்தில் நடந்த இந்த விழாவில், முதல் இசை குறுந்தகட்டை தனது தீவிர ரசிகரிடம் வழங்கினார்.
அந்த ரசிகர் பெயர் பத்ரிநாராயணன். மதுரைக்காரரான இவர் மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாற்றுத் திறனாளியை கவுரவப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை கமல் நடத்தியது வந்திருந்தவர்களை நெகிழ வைத்தது.
அடுத்து கோவையிலும், மாலை சென்னையிலும் இசைத் தட்டை வெளியிடவிருக்கிறார் கமல்.
Comments


Click it and Unblock the Notifications
