சிங்கம் 2 இசை வெளியீட்டு விழாவில் 3 சிங்கங்கள்
சென்னை: சிங்கம் 2 இசை வெளியீட்டு விழாவில் சிங்கம் படத்தின் கன்னடம் மற்றும் இந்தி ரீமேக்கில் நடித்த சுதீப் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ள சிங்கம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா
சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி நடக்கிறது. இந்த பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளுமாறு சிங்கம் படத்தின் கன்னடம் மற்றும் இந்தி ரீமேக்குகளில் நடித்த சுதீப் மற்றும் அஜ்ய தேவ்கன் ஆகியோரை இயக்குனர் ஹரி அழைத்துள்ளாராம்.
மேலும் சிங்கம் படத்தை இந்தியில் ரீமேக் செய்த பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சுதீப்பும், தேவ்கனும் சம்மதம் தெரிவித்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.

சூதீப், தேவ்கன்
சூதீப்பும், தேவ்கனும் சிங்கம் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு வருகிறார்களே அப்படி என்றால் அவர்களும் 2ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்குவார்களோ?

தமிழ் சிங்கம்
சிங்கம் வெற்றியைத் தொடர்ந்து ஹரி சிங்கம் 2 படத்தை எடுத்துள்ளார்.

சூர்யாவுடன் முதன்முதலாக ஹன்சிகா
சிங்கம் 2 படத்தின் மூலம் ஹன்சிகா முதன்முதலாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications