என்றாவது ஒரு நாள் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு... சிறப்பு!

சென்னை : நடிகர் விதார்த் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் என்றாவது ஒரு நாள்.

விவசாயிகள் பிரச்சினையை முன்னிறுத்தி வெளிவந்துள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

தற்போது படத்தில் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கண்ணே என் கண்ணே என்று துவங்கும் அந்த பாடல் மனதை ஈர்க்கிறது.

என்றாவது ஒரு நாள் படம்

என்றாவது ஒரு நாள் படம்

நடிகர் விதார்த் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் ரிலீசாகியுள்ள படம் என்றாவது ஒரு நாள். முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இயக்குநராக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். உலகமயமாக்கல் காரணமாக விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை இந்தப்படம் மையப்படுத்தியுள்ளது.

விவசாயியாக நடித்துள்ள விதார்த்

விவசாயியாக நடித்துள்ள விதார்த்

விதார்த் இந்தப் படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். படத்தின் பாதியிலேயே இவர் இறந்து விட்டாலும் இவரது இயல்பான நடிப்பு படத்தின் ஓட்டத்தில் சிறப்பான பங்களிக்கிறது. மாடுகள் மீது காட்டும் பரிவு, தண்ணீர் பஞ்சத்தால் படும் அவதி என தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

வலுவான கதைக்களம்

வலுவான கதைக்களம்

இவரது மனைவியாக ரம்யா நம்பீசனும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய கணவன் பட்ட கடனை அடைத்து மாடுகளை மீட்க அவர் எதிர்கொள்ளும் போராட்டம் படத்தில் கருவாக கொள்ளப்பட்டுள்ளது. முதல் படத்திலேயே இத்தகைய வலுவான கதைக்களத்தை எடுத்து அதை இயல்பாக தந்த விதத்தில் வெற்றி துரைசாமி கவனத்தை ஈர்த்துள்ளார்.

தேர்ந்த நடிப்பு

தேர்ந்த நடிப்பு

படத்தில் அனைத்து கேரக்டர்களும் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளன. அவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் வெற்றி துரைசாமி. சின்ன சின்ன கதாபாத்திரங்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கின்றனர். இசையமைப்பாளர் ரகுநந்தனின் பின்னணி இசை படத்திற்கு சிறப்பாக கைக்கொடுக்கிறது.

வீடியோ பாடல் வெளியீடு

இந்நிலையில் படத்தின் வீடியோ பாடல் கண்ணே என் கண்ணே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரம்யா நம்பீசன் இந்தப் பாடலை பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கர்ப்பமாகும் தன்னுடைய மனைவியை விதார்த் கண்ணுக்குள் வைத்து தாங்குவது போல அந்தப் பாடல் செல்கிறது. எளிமையான மனிதர்களின் அக்கறை கூட அழகாகத்தான் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X