கவினின் பல வருட கனவை நனவாக்கிய அனிருத்.. ‘கிஸ்’ முதல் சிங்கிளே கிக்கா இருக்குதே!

சென்னை: பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் படம் கூடிய சீக்கிரமே ரிலீஸ் ஆக போகிறது. அந்த படத்தின் புரமோஷனை படக்குழு கிக் ஸ்டார்ட் பண்ணி உள்ளனர். ஜென் மார்ட்டின் இந்த படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், அவரது இசையில் அனிருத் குரலில் உருவாகியுள்ள முதல் சிங்கிள் ப்ரோமோவை கவின் தற்போது வெளியிட்டுள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கவின். ரம்யா நம்பீசன் உடன் இணைந்து நட்புன்னா என்னானு தெரியுமா படத்தில் நடித்து ஹீரோவாக மாறினார். ஆனால், அவருக்கு முதல் படம் பெரிதாக கை கொடுக்கவில்லை.

Kavin thanks to Anirudh for singing a song for his movie Kiss

அதன் காரணமாக பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை தேடிக் கொண்டார். இலங்கையில் இருந்து போட்டியாளராக வந்த லாஸ்லியாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சி முடிவதற்குள் அது பிரேக்கப் ஆக மாற இன்னொரு பெண்ணை திருமணமும் செய்துக் கொண்டார் கவின்.

பிக் பாஸுக்கு பிறகு எல்லாமே ஹிட்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் பெரிதாக வாழ்க்கையில் மாற்றம் வராது என பலர் புலம்பினாலும் சில பிரபலங்கள் பிக் பாஸுக்குப் பிறகு நல்ல வரவேற்பையும் சினிமா வாழ்க்கையையும் பெற்று டாப்பில் தான் உள்ளனர். நடிகர் கவினுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கிடைத்த லிப்ட் படம் அவரது வாழ்க்கையை நல்லாவே தூக்கி விட்டது. அதன் பின்னர் வெளியான டாடா படம் அவரை கோலிவுட்டின் எதிர்காலம் என்கிற இடத்துக்கு கொண்டு சென்றது.

நடிப்பில் தூள் கிளப்புறாரு: இளம் நடிகர்கள் வெறும் காதல் படங்களிலும் அதை விட்டால் கத்தி, துப்பாக்கி எடுத்துக் கொண்டு ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி தூள் கிளப்பி வருகிறார். ஸ்டார் மற்றும் ப்ளடி பெக்கர் உள்ளிட்ட படங்களிலும் நடிப்புக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுத்திருந்தார் கவின். இந்நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக கிஸ் எனும் படம் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது. மேலும், மாஸ்க் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

கிஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள்: உன்னாலே உன்னாலே, பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் நடித்துள்ள நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின், அயோத்யா படத்தின் மூலம் பிரபலமான ப்ரீத்தி அஸ்ரானி இருவரும் இணைந்து நடித்துள்ள கிஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஏப்ரல் 30ம் தேதி ஜென் மார்ட்டின் இசையில் வெளியாக காத்திருக்கிறது. அதன் ப்ரோமோ வீடியோவை சற்றுமுன் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பல வருட கனவு நனவாகிடுச்சு: ஜென் மார்ட்டின் இசையில் உருவாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு ராக் ஸ்டார் அனிருத் குரல் கொடுத்துள்ளார். அதைக் கேட்டு உற்சாகத்தில் மிதந்து வரும் நடிகர் கவின், தன்னோட பல வருஷ கனவு நனவாகிடுச்சு என்றும் தேங்க்ஸ் அனி என்றும் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். வெளியான சில வரிகளே காதுகளுக்கு இதமான தாதல் பாடலாக உள்ள நிலையில், முழுப்பாடலையும் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X