வேட்டி எடுத்து கட்டிக்கோ கெத்தா இருக்கும் பார்த்துக்கோ.. வெளுத்து கட்டும் கென் கருணாஸ்.. வாடா ராசா!

சென்னை: குட்டி பட்டாஸ் வீடியோ பாடலை வெளியிட்ட அதே குழுவின் அடுத்த வீடியோ பாடல் தான் வாடா ராசா.

அசுரன் படத்தில் ரீல் மகனாக நடித்த கென் கருணாஸ் ஆட்ட நாயகனாக அசத்தும் இந்த வாடா ராசா பாடலை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அம்மா கிரேஸ் கருணாஸ் உடன் இணைந்து கென் கருணாஸ் கலக்கும் வாடா ராசா பாடல் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

குட்டி பட்டாஸ்

குட்டி பட்டாஸ்

குட்டி பட்டாஸ், அஸ்குமாரோ என சமீப காலமாக ஏகப்பட்ட ஆல்பம் பாடல்கள் திரைப்பட பாடல்களுக்கு போட்டிப் போடும் அளவுக்கு வெளியாகி ஹிட் ஆகி வருகின்றன. அந்த வரிசையில் குட்டி பட்டாஸ் டீம் உருவாக்கி உள்ள அடுத்த படைப்பான வாடா ராசா வீடியோ பாடல் சோனி மியூசிக் சவுத்தில் வெளியாகி உள்ளது.

தனுஷ் வெளியீடு

தனுஷ் வெளியீடு

அசுரன் படத்தில் நடிகர் தனுசுக்கு ரீல் மகனாக நடித்த நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் பக்கா நடனாடி அசத்தி உள்ள வாடா ராசா வீடியோ ஆல்பம் பாடலை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ட்வீட் போட்டு வெளியிட்டு உள்ளார். தனுஷ் வெளியிட்டதும் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த வீடியோ பாடலை கண்டு ரசித்து வருகின்றனர்.

அசுரனில் அசத்தல்

அசுரனில் அசத்தல்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமே கென் கருணாஸ் நடித்த கதாபாத்திரம் தான். அண்ணனை கொன்றவனை பழிவாங்க தம்பி செய்யும் சம்பவம் தான் ஹைலைட்டே. அதன் பிறகு மகன் கென் கருணாஸை காப்பாற்ற அப்பா தனுஷ் எடுக்கும் முயற்சிகள் தான் அசுரன் படமே!

அம்மாவுடன்

அம்மாவுடன்

கென் மற்றும் ஈஸ்வர் இணைந்து இந்த பாடலுக்கான வரிகளை எழுதி உள்ளனர். அதுமட்டுமின்றி கென் மற்றும் அவரது அம்மா கிரேஸ் கருணாஸ் இருவரும் தான் இந்த பாடலை பாடியுள்ளனர். வீடியோவிலும் மகனுக்காக தோன்றி தனது காந்தக் குரலால் மிரட்டி உள்ளார் கிரேஸ் கருணாஸ்.

ப்ரீத்தி ஷர்மா

ப்ரீத்தி ஷர்மா

சித்தி 2 சீரியலில் வெண்பாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ள ப்ரீத்தி ஷர்மா தான் இந்த பாடலில் கென் கருணாஸுக்கு ஜோடியாக ஆடி உள்ளார். ப்ரீத்தி ஷர்மாவின் க்யூட்னஸ் மற்றும் அழகான காஸ்ட்யூம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Recommended Video

DHANUSH AWARDல எனக்கும் SHARE இருக்குனு சொன்னார் | ASURAN NATIONAL AWARD | FILMIBEAT TAMIL
வேட்டியின் பெருமை

வேட்டியின் பெருமை

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற வேட்டிக் கட்டு பாடல் எப்படி வேட்டியின் பெருமையை பேசியதோ, அதே போல இந்த வாடா ராசா பாடல் முழுவதும் வேட்டியின் பெருமையையும் சேலையின் பெருமையையும் தமிழர்களின் கலாசாராத்தையும் உழவர்கள் மற்றும் நெசவாளர்களின் துயரத்தையும் எடுத்து உரைக்கிறது.

சபாஷ் கென்

இந்த பாடலை அழகான வரிகளால் நிரப்பி அதற்கு குரலும் கொடுத்து தனக்கு நன்றாக ஆடவும் தெரியும் என தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நிரூபித்து ஆல் ரவுண்டராக கலக்கி உள்ள இந்த பாடலின் நாயகன் கென் கருணாஸுக்கு பெரிய சபாஷ்.

கருணாஸ் மிஸ்சிங்

கருணாஸ் மிஸ்சிங்

அம்மாவும் மகனும் சேர்ந்து பாட, மகன் வேட்டிக் கட்டி வேற லெவலில் ஆட இப்படியொரு கலர்ஃபுல்லான கிராமத்து குத்து பாடலில் நடிகர் கருணாஸ் மட்டும் மிஸ் ஆகிட்டாரே என ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். வாடா ராசா பாடல் பார்த்ததும் பலருக்கும் பிடித்துப் போகும் வகையில் இருக்கிறது என்றும் கென் கருணாஸ் சீக்கிரமே ஹீரோவாக வாழ்த்துக்கள் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X