வீடு, தோப்பு துரவை விற்றுப் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள்! - வைரமுத்து

By Shankar

Kizhakku Paartha Veedu
இன்றைய சூழலில் வீடு, நிலம், மனைகளை விற்றுத்தான் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கிறார்கள் என்றார் கவிஞர் வைரமுத்து.

தேனி என்.சின்னமாயன் பிலிம்ஸ் தயாரித்துள்ள முதல் படம் 'கிழக்குப் பாத்த வீடு'. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.

இயக்குநர் பாரதிராஜா பாடல்களை வெளியிட, தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து, விழாவுக்கு தலைமை தாங்கிப் பேசுகையில், "தேனி மாவட்டம் ஒரு இயக்குனரை, ஒரு இசையமைப்பாளரை, ஒரு பாடல் ஆசிரியரை தமிழ் உலகத்துக்கு தந்திருக்கிறது. இப்போது சின்னமாயன் என்ற தயாரிப்பாளரை தந்திருக்கிறது. இன்றைய சினிமா சூழலில், ஒரு தயாரிப்பாளர் அமைவதுதான் அரிய செயலாகும்.

படம் எடுத்து முடித்த ஒரு தயாரிப்பாளரைப் பார்த்து, "ஏரியா எல்லாம் விற்று விட்டீர்களா?'' என்று ஒருவர் கேட்டாராம்.

"ஊரில் ஒரு தென்னந்தோப்பு, சாலிகிராமத்தில் ஒரு வீடு, நீலாங்கரையில் ஒரு அடிமனை என எல்லா ஏரியாவையும் விற்று விட்டேன். எடுத்த படத்தைத்தான் இன்னும் விற்க முடியவில்லை'' என்று தயாரிப்பாளர் புலம்பினாராம். இப்படி ஒரு காலகட்டத்தில், படம் தயாரிக்க வருபவர்கள் துணிச்சல் மிக்கவர்கள்.

கிழக்குப் பாத்த வீடு' என்பது கதையல்ல, தேனி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு நிஜம். தறிகெட்டு திரிந்த ஒரு இளைஞனை காதல் எப்படி மனிதனாக்கியது என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஒரு இளைஞனை என் வீட்டுக்கு அழைத்து வந்து, 'வர்தான் கதாநாயகன்' என்றார்கள். காடு போல் வளர்ந்திருந்த அந்த இளைஞனின் பரட்டைத் தலை என் கவனத்தை ஈர்த்தது.

தலை சிறந்த கதை மட்டுமல்ல, தலைமுடியும் கூட ஒரு பாட்டுக்கு பயன்படுவது உண்டு. இந்த படத்து கதாநாயகனின் பரட்டைத்தலையை பாடலில் பயன்படுத்தியிருக்கிறேன்.

'சீவாத தலையப்போல வாழ்ந்தேனே நானாக...

சீப்பாக வந்தாளய்யா என் வாழ்க்கை நேராக' என்று எழுதியிருக்கிறேன்," என்றார்.

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் எஸ் பி பாலகுருசாமி. 32 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டத்தில் நடந்த உண்மைக் கதையை, அதை நேரில் பார்த்த அனுபவத்தை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர்.

கதாநாயகனாக பரதன், எதிர் நாயகனாக திலக், நாயகியாக தமலி, தம்பி ராமையா, அப்புக்குட்டி நடித்துள்ளனர்.

சேவிலோராஜா ஒளிப்பதிவு செய்ய, மரியா மனோகர் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X