அக்டோபரில் கோச்சடையான் இசை... ரஜினி பிறந்த நாளில் படம் ரிலீஸ்?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் பாடல்களை வரும் அக்டோபர் மாதம் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
நவராத்திரி தினத்தில் இந்த இசை வெளியீடு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஜினியின் பிறந்த தினமான டிசம்பர் 12-ம் தேதி படத்தை வெளியிடப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏஆர் ரஹ்மான்
சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில், மோஷன் கேப்சரிங் 3 டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் இந்தியாவின் முதல் படம் என்ற அறிவிப்போடு வரும் கோச்சடையானுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரஜினி குரலில்..
மொத்தம் 5 பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்துக்காக ரஜினி தன் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியுள்ளார். வசன நடையில் அமைந்த பாடல் இது. அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். சங்கத் தமிழில் அமைந்த பாடல்கள் இவை.

அக்டோபரில் இசை
கோச்சடையான் இசை வரும் அக்டோபரில் வெளியாகும் என சவுந்தர்யா தெரிவித்துள்ளார். ஆனால் தேதி குறிப்பிடவில்லை. ட்ரைலரை பிள்ளையார் சதுர்த்திக்கு வெளியிட்ட மாதிரி, இசைத் தட்டை நவராத்திரியன்று வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.

வெளிநாட்டில்?
முன்னதாக கோச்சடையான் இசை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைத்து வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறியிருந்தார்.

படம் எப்போது?
கோச்சடையான் படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமுள்ளதாக முதலில் கூறியிருந்தனர். ஆனால் இப்போது ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி படத்தை வெளியிடப் போவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











