நேரு உள்விளையாட்டரங்கில் கோச்சடையான் இசை வெளியீடு?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை, வரும் டிசம்பர் 12-ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் சவுந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் முப்பரிமாண படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் ரஜினி.
மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் பெரும்பாலான காட்சிகளும், நிஜமான ரஜினி சில காட்சிகளிலும் தோன்றுகிறார்கள்.
இந்தப் படத்தின் இசை வரும் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இசை வெளியீட்டை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைத்து வெளியிடப் போவதாகவும், அதில் ரஜினி கலந்து கொள்வார் என்றும் முதலில் அதன் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது அந்தத் திட்டத்தில் மாற்றம். இசை வெளியீட்டை சென்னையிலேயே நடத்துகிறார்கள்.
நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக இந்த விழாவை நடத்தவிருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
இதற்கிடையில் கோச்சடையான் விளம்பரப் பணிகளை முழு வீச்சில் ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











