ரூ 15 கோடி செலவில் விளம்பரம்... 3650 பெட்ரோல் பங்குகளில் கோச்சடையான் ஹோர்டிங், பேனர்

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஞாயிறன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.

ஈராஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிடெட் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சௌந்தர்யா ஆர். அஷ்வின் இயக்கியுள்ள படம் - கோச்சடையான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மார்ச் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.

அதேபோல், படத்திற்கான விளம்பர செலவுக்காக மட்டும் ரூ 15 கோடி ஒதுக்கப் பட்டுள்ளதாம்.

இசை மற்றும் டிரெய்லர்...

இசை மற்றும் டிரெய்லர்...

அவ்விழாவில் கோச்சடையான் தமிழ்ப்படத்தின் இசை மட்டுமின்றி கோச்சடையான் தெலுங்குப்படத்தின் இசையும் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் கோச்சடையான் படத்தின் டிரெய்லரும் அவ்விழாவில் வெளியிடப்படுகிறது.

கோச்சடையான் ஸ்பெஷல்....

கோச்சடையான் ஸ்பெஷல்....

இந்த விழாவில், கோச்சடையான் படத்தின் ஸ்பான்ஸரான கார்பன் மொபைலின் புது மாடலும் வெளியிடப்பட உள்ளது. அதோடு, கோச்சடையான் படத்தின் மற்றொரு ஸ்பான்ஸரான ஹங்காமா ஆன்லைன் மற்றும் மொபைல் கேம்ஸும் வெளியிடப்பட உள்ளது.

15 கோடி செலவில்...

15 கோடி செலவில்...

கோச்சடையான் படம் மக்களை சென்றடைய இதுவரை யாரும் செய்திராத புதிய மற்றும் புதுமையான விளம்பர உத்திகளை கையாளத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி, கோச்சடையான் படத்தின் ஸ்பான்ஸரான கார்பன் மொபைல் உடன் மற்ற ஸ்பான்ஸர்களும் இணைந்து கோச்சடையான் படத்தின் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி விளம்பரத்துக்காக சுமார் 15 கோடி செலவு செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

3650 பெட்ரோலியம் பங்குகளில்...

3650 பெட்ரோலியம் பங்குகளில்...

தென் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்னாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 3650 பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பெட்ரோல் பங்குகளில் கோச்சடையான் படத்தின் ஹோர்டிங் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட உள்ளன.

திரும்பிய பக்கமெல்லாம்...

திரும்பிய பக்கமெல்லாம்...

அதோடு, சென்னையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கோச்சடையான் படத்தின் விளம்பர ஹோர்டிங்குகள் வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக...

இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக...

கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் வெளியிடப்படும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான்.

கோடையில் கோடிகளை அள்ள திட்டம்...

கோடையில் கோடிகளை அள்ள திட்டம்...

மார்ச் மூன்றாவது வாரத்தில் தணிக்கைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கும் கோச்சடையான் படம் கோடைவிருந்தாக திரைக்கு வருகிறது.

அமிதாப் பங்கேற்பு...

அமிதாப் பங்கேற்பு...

இந்த விழாவில் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது மற்றொரு சிறப்புச் செய்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X