மார்ச் 9-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீடு!- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 9-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.
இதனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஆதி, ஜாக்கி ஷெராப், ருக்மிணி, ஷோபனா, உள்பட பலர் நடிப்பில் தயாராகி உள்ள படம் கோச்சடையான். பாடல்களை வைரமுத்து எழுத ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

ஏப்ரல் 11-ல்
கோச்சடையான் படம் வருகிற ஏப்ரல் மாதம், 11-ந்தேதி வெளியாகிறது. உலகமெங்கும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடபட்டுள்ளனர்.

10 மொழிகளில்..
தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி உள்பட 10 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஆங்கிலத்திலும் படத்தை வெளியிடுகின்றனர்.

தள்ளிப் போனது
பிப்ரவரி 28ந் தேதி பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவ்விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோச்சடையான் பட இசை மார்ச் 9-ந் தேதி சென்னையில் வெளியாகிறது.

தெலுங்குக்கு தனியாக
மார்ச் 10-ந் தேதி ஹைதராபாத்தில் கோச்சடையான் படத்தின் தெலுங்குப் பதிப்பான விக்ரம சிம்ஹா பாடல்களை வெளியிடுகின்றனர். இவ்விரு விழாக்களிலும் ரஜினியும், படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள தீபிகா படுகோனேயும் கலந்து கொள்கிறார்கள்.

500 கோடி
இப்படத்துக்கு முதல் வார வசூலாக ரூ.500 கோடி வரை வரும் எதிர்ப்பார்க்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
ஹாலிவுட் படங்களான அவதார், டின்டின் பாணியில் கோச்சடையான் தயாராகியுள்ளது. தந்தை, மகன் என இரு வேடங்களில் ரஜினி வருகிறார். ரஜினி மகள் சௌந்தர்யா இப்படத்தை இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











